Aran Sei

கோவை: கோட்சேவை எதிர்த்து முழக்கமிட்டவர்களை தடுத்த காவல்துறையினர்

காத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட  நினைவு நாளையொட்டி கோவையில் நடந்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ்’யை தாக்கிப் பேசக் கூடாது என காவல்துறை உதவி ஆணையர் தடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திரவிடர் கழகம் , புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், ஆதித் தமிழர் பேரவை  உள்ளிட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த மகாத்மா காந்திக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் இச்சம்பவம் நடபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி,ராமாகிருஷ்ணன் உறுதி மொழி வாசிக்க பிறர் அதை வழிமொழிந்தனர். அந்த உறுதி மொழியில், மதச்சார்பின்மை என்னும் உயரிய கோட்பாட்டை உயர்த்திப் பிடித்து, வெறுப்பு அரசியலுக்கு எதிராக, மக்கள் ஒற்றுமையை மதங்கள் கடந்து வலியுறுத்துவதற்காக, இந்து மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளில், இந்த மண்ணில் தொடர்ந்து சாதி, மத வெறுப்பு அரசியலை விதைத்து, மக்களிடையே மதவெறியை உருவாக்கி, மக்களிடத்தில் பிளவுபடுத்திட துணியும் கோட்சேவின் வாரிசுகளால், ஆர்எஸ்எஸ் எனும் பயங்கரவாதிகளால் காந்திஜியின் சுட்டுக் கொல்லப்பட்டார். மக்கள் மீதான அனைத்து” என்று உறுதிமொழி சொல்லிக்கொண்டிருக்கும் போது காவல்துறையினர் இடைமறித்தனர்

பின்னர் காவல்துறைக்கும் நிகழ்ச்சியில் பங்கெடுத்துவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  ”காந்திஜியை கோட்சே சுட்டுக் கொல்லவில்லை என்று சொல்கிறீர்களா? காந்திஜி சுட்டுக்கொல்லப்பட்டு அந்த வழக்கு நடத்தப்பட்டு கோட்சே தூக்கிலிடப்பட்டார்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  ஜி,ராமாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.

நீங்கள் சரியாக அனுமதி பெற்று இந்த கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டும். மேலும் அடுத்த மதத்தை புண்படுத்துவது போன்று நீங்கள் பேசக் கூடாது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

”நாங்கள் எந்த மதத்தையும் புண்படுத்தவில்லை. ஆர்எஸ்எஸை எல்லா மக்களும் ஏற்றுக் கொள்கிறார்களா? என்றும் சிபிஎம் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், “நேற்று நாங்கள் கொடுத்த விண்ணப்பத்தில் நிகழ்ச்சி  நடைபெறும் இடம், நேரம் குறிப்பிட்டு அனுமதி கோரினோம். அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தி  பின்னர்  நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கொடுத்து காவல்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர் என்று சிபிஎம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரண்செய் யிடம் பேசிய தந்தை பெரியார் திரவிடர் கழகத்தைச் சேர்ந்த மனேஜ், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே கோட்சே பெயரில் உள்ள பதாகையை காவல்துறையினர் எடுக்கச் சொல்லி வலியுறுத்தினர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது காந்தியின் படத்தை காவல்துறை எடுக்க முற்பட்டது. கடும் வாக்குவாதத்திற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. காவல்துறை வலதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிகிறது” என்று தெரிவித்தார்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்