ஒரு கட்சி சார்பாக நடந்து கொள்கிறார்கள் எனப் புகார் எழுந்ததை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் வேறொரு துறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் ஆணையர் மீது எண்ணற்ற புகார்கள் எழுந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் அவர்களைப் பணியிட மாற்றம் செய்திட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கைகள் நடைமுறைக்கு சாத்தியமா? – தேர்தல் ஆணையம் ஆராய உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோர் தேர்தல் பொறுப்புகள் அற்ற பணிகளுக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .
இதனையடுத்து, கோவை மாவட்டத்தின் ஆட்சியராக நாகராஜனும் , மாவட்ட காவல் ஆணையரக ஆசிர்வாதம் டேவிட்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.