Aran Sei

OLA, UBER ஐ புறக்கணித்து புதிய செயலியை உருவாக்கிய தொழிற்சங்கம் – கார்பரேட் நிறுவனங்களுக்கு சவால் விடும் கோயம்புத்தூர் ஆட்டோ ஓட்டுனர்கள்

கொரானா தொற்றுநோய்க்கு மத்தியிலும் கோயம்புத்தூரில் உள்ள ஆட்டோரிக்க்ஷா தொழிலாளர்கள்  தங்களின் வருமானத்தை மேம்படுத்த ஒரு புதுமையான மாதிரியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் தங்களுக்கேயுரிய செயலியை (App)  வடிவமைத்து எந்தவொரு பெரு நிறுவனத்தின் ஆதரவின்றி மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்பு தளத்திற்கும் எந்தத் தரகு பணத்தையும்  செலுத்தாமல்  அவர்கள் சொந்தமாக  ஆட்டோ ஓட்டும்  வேலையைச் செய்கிறனர்.

இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (FITU), இந்திய பொதுநலக் கட்சியுடன் ( Welfare Party of India) இணைந்ததாகும். அது கொரானா தொற்றுநோய்க்கு முன்பே கோவையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஒருங்கிணைய ஏற்பாடு செய்தது. பல்வேறு சாக்குப்போக்குகளின் கீழ், ஆட்டோ தொழிலாளர்களை காவல்துறையினர் துன்புறுத்துவது நகரத்தில் பரவலாக இருந்து வந்தது. அந்த நிலையில்  தொழிற்சங்கம் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தும் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்கவும் செய்ததால் பிரபலமடைந்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தனியார்மயம்தான் – ஷோபா சக்தி

ஓலா, ஊபர் போன்ற திரட்டிகளில்(aggregators) தொழிலாளர்கள் வேலை செய்யத் தொடங்கியபொழுது தொழிற்சங்கமும் தங்கள் பிரச்சனைகளை அந்த நிறுவனங்களிடம் எடுத்துக் கூறியது. பின்னர் அவர்கள் இன்னொரு புறத்தில் தொழிற்சங்க ஊழியர்களை ஒரு முறைசாரா கூட்டுறவு நிறுவனமாக ஒழுங்கமைத்தனர்; இது கால் டாக்ஸி சேவைகளைப் போலவே அவர்களுக்கு சொந்தமான கால் ஆட்டோ சேவையைத் தொடங்கியது.

“தங்கள் உரிமைகளுக்காகப் போராட ஒரு தொழிற்சங்கத்தைக் கட்டமைப்பதைத் தவிர, தொழிலாளர்களுக்குத் தொற்றுநோய் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரு ஏற்பாடும், எந்தவிதமான சுரண்டலும் இல்லாமல் வாழ்வாதாரத்திற்கு சில உத்தரவாதங்களும் தேவை என்று நாங்கள் உணர்ந்தோம்.  யாரேனும் ஒரு முதலாளி அல்லது பெருநிறுவனம் அன்றாட அடிப்படையில் அவர்களை வழிநடத்துகிறார்கள்” என்கிறார் ஏ.ரஹ்மான் , FITU தேசிய பொதுச் செயலாளர்.

கொரானா எதிர்வினை கண்காணிப்பாளரிடம்  (கோவிட் ரெஸ்பான்ஸ் வாட்சிடம்)  பேசிய அவர், ‘கொரானா தொற்று நோயின் சமூக முடக்கத்தின்போது வருமானம் இல்லாததால் ஆட்டோ தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது’ என்றார். அவர்களின் பரஸ்பர உதவியாலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியாலும் பிழைப்பதற்கு முடியவில்லை. முடக்கம் தளர்த்தப்பட்டபோதும் கொரானாவுக்கு முந்தைய நாட்களைப் போல மக்கள் நடமாட்டம் இல்லாததால் வருமானம் மேம்படவில்லை. கோவையில் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ஆனால் பலருக்கு, குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்பவர்கள் போன்றவர்களுக்கு ஆட்டோ சேவை மிகவும் தேவைப்பட்டது.

உத்தரபிரதேசம்: ‘உங்கள் சமூக பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்’ – மசூதிக்கு முன்பு காவி உடை அணிந்த சாமியார் மிரட்டல்

”ஆரம்பத்தில் நாங்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினோம், அதை எங்கள் வாடிக்கையாளர்களிடையே பிரபலப்படுத்தினோம். அவர்களுக்கு ஆட்டோ சேவை தேவைப்படும்போதெல்லாம் செய்திகளை அனுப்புவார்கள். எந்த தொழிலாளி வாடிக்கையாளருக்கு அருகில் இருக்கிறாரோ அவர் அந்த அழைப்பிற்கு பதிலளித்து அவர் அழைப்பை எடுத்ததை குழுவிற்கு தெரிவிப்பார். வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களுக்கு சேவை செய்வதைத் தவிர பதிவு செய்யப்படாத பயணிகளையும் ஆட்டோ தொழிலாளர்கள் ஏற்றிச் சென்றனர். வாட்ஸ்அப் குழுவில் பதிவுசெய்யப்பட்ட பயணிகளின் பங்கு அதிகரித்தது” என்கிறார் ரஹ்மான்.

தொழிற்சங்கம் லேபோ ஆப்  (Labo App) என்ற செயலியை உருவாக்கியது, இது தொழிலாளர்களுக்கான செயலி என்பதை தெளிவாகக் குறிக்கிறது. பின்னர் அதை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் மற்றும் தட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தியது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் தொலைபேசிகளில் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அருகிலுள்ள ஆட்டோவை வரவழைக்க அதைப் பயன்படுத்துவது எப்படி என்பதை வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மக்கள் ஏற்கனவே கால் டாக்ஸி சேவைகளை நன்கு அறிந்திருந்ததால், அவர்கள் தங்கள் ஆட்டோரிக்க்ஷா தேவைகளுக்காக இந்த செயலியை விரைவாக ஏற்றுக்கொண்டனர்.

பொதுமக்களை குற்றவாளியாக்கும் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – மக்களவையில் மஹுவா மொய்த்ரா ஆவேசம்

“பெரிய டாக்ஸி ஒருங்கிணைப்பு  நிறுவனங்களின் சேவைகள் சற்று ஒழுங்கற்றதாக இருந்ததாலும் அவற்றின் கட்டணங்களை உயர்த்தியதாலும் மக்கள் எங்கள் ஆட்டோ சேவையை ஒப்பீட்டளவில் சிக்கனமானதாகவும் திறமையான சேவை தரத்துடனும் இருந்ததாலும் மக்கள்  பயன்படுத்தத் தொடங்கினர்” என்றும் FITU தேசிய பொதுச் செயலாளர் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே  நம்பகத்தன்மை முக்கியம் என்றும் வாடிக்கையாளர்களிடையே நல்ல பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கம் வலியுறுத்தியது. தாங்கள் முன்மாதிரியான சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்குள் ஊட்டப்பட்டது.

இதன் விளைவாக, கூட்டுறவு ஊழியர்கள் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்தாலும் அல்லது நள்ளிரவு போன்ற ஒற்றைப்படை நேரங்களிலும் அழைப்பை மறுப்பதில்லை. அதற்காக மீட்டர் ஓட்டத்கிற்கு  மேல் ஒரு ரூபாய் கூட வசூலிக்கக் கூடாது என்றும் அவர்கள் முடிவு செய்தனர். படிப்படியாக, பயனர்களிடையே ஆட்டோக்கள் பிரபலமடைந்தன. மேலும் அவை ‘மீட்டர் ஆட்டோக்கள்” என்று அழைக்கப்பட்டன, அல்லது ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மீட்டர் ஓட்டத்தின்படி மட்டுமே  கட்டணம் வசூலிக்கப்படுகின்றன என்றும் மீட்டர்களுக்கு சூடு வைக்காதவை – அளவுக்கு மேல் மீட்டர் ஓடும்படி திருத்தம் செய்யப்படாதவை என்றும் அறியப்பட்டன.

எந்தவொரு ஓட்டுநரும் வாடிக்கையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக தொழிற்சங்கத்திற்கு  புகார் வந்தால் அது உடனடியாக விரிவான விசாரணையை நடத்தி அந்தத் தொழிலாளி தன் நடத்தையை சீர் செய்து கொள்ள கற்பிக்கும். குடிபோதையில் ஆட்டோ ஓட்டுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளி குடிபோதையில் ஆட்டோ ஓட்டுவதும் வாடிக்கையாளரிடம் தவறாக நடந்துகொள்வதும் தொழிற்சங்கத் தலைமைக்கு தெரியவந்ததும் அவர் உடனடியாக வெளியேற்றப்படுவார். குடிப்பழக்கம் தங்களுடைய சொந்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக கூட்டுறவின் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் என்று தொழிலாளர்கள் கற்பிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரமாகும் வெப்பமயமாதல் – உலகைக் காக்க வழி கூறும் ஐ.பி.சி.சி

இந்த அணுகுமுறை ஈவுத்தொகையை வழங்கத் தொடங்கியது. கூட்டுறவுத் தொழிலாளர்கள் முன்பு வந்ததை விட அதிகமான அழைப்புகளை செயலி மூலம் பெறத் தொடங்கினர். மற்ற ஆட்டோ தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்காமலும் சவாரி இல்லாமல் சும்மா இருப்பதாலும், அதிக வருமானம் ஈட்ட முடியாமலும் இருப்பதைக் கண்டு, மற்ற ஆட்டோ தொழிலாளர்களும் ஆர்வம் காட்டி, தொழிற்சங்கம் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் சேரத் தொடங்கினர்.

மேலும், இந்த அழைப்பாளர் செயலி சேவைக்காக தொழிலாளர்களிடம் இருந்து தொழிற்சங்கம் பணம் எதுவும் வசூலிக்கவில்லை. உண்மையில், சேவையை இயக்குவதில் பெரிய செலவு எதுவும் இல்லை. தொழிற்சங்க அலுவலகத்திலிருந்தே செயலி மூலம் தேவையான ஒருங்கிணைப்புகளைச் செய்து, எழும் பிரச்சனைகளை வரிசைப்படுத்த ஓரிரு சங்க உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்தனர்.

தொழிற்சங்க உறுப்பினர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1500 சம்பாதிக்கத் தொடங்கினர். இந்த அழைப்பு – ஆட்டோ சேவையின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பு அவர்கள் சம்பாதித்ததை விட  இது அதிகமாகும். ஒருங்கிணைக்கும் பெரும்  நிறுவனங்களில் பணிபுரியும் போது, அவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பெரும் பகுதியை நிறுவனங்களுக்கு தரகாகப் பிரித்துத் தர வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டாக, பெரும் நிறுவனங்கள் டாக்சி ஓட்டுநர்களிடமிருந்து 30% வரை தரகாக  (கமிஷன்) வசூலித்தன.

ஆரம்பத்தில், தங்கள் ஆட்டோ சேவையை பிரபலப்படுத்த, பெரிய நிறுவனங்கள் தரக்குத் தொகையை (கமிஷனை) வெறும் 10% ஆகக் குறைத்தன. ஆனால், அதன்பிறகு ஏதாவது ஒரு கட்டணம் என்ற பெயரில் பணத்தைக் கழிக்கத் தொடங்கினர். ஆட்டோ தொழிலாளி செலுத்திய மொத்த கட்டணம் மேலும் 10% ஆனது. எனவே திறம்பட மொத்தமாக 20% ஆனது. இதன் பொருள், இப்போது நாள் ஒன்றுக்கு ரூ.1500 சம்பாதிக்கும் ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.300 ஐ பெரிய  நிறுவனத்திற்கு வழங்க வேண்டியிருக்கும். தொழிற்சங்கத்தின் முன்முயற்சியால் இப்போது அவர்கள் சம்பாதித்த பணம் முழுவதையும் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

இச்சோதனையின் மற்றொரு பாராட்டுக்குரிய அம்சம் என்னவென்றால், உழைக்கும் மக்களிடையே வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கமான ஒத்துழைப்பின் நல்ல முன்மாதிரியாக இது வெளிப்பட்டுள்ளது. பொதுநலக் கட்சியின் முன்முயற்சியின் மூலம் தொடங்கப்பட்டாலும், இது முக்கியமாக இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப்படும் ஒரு கட்சியாகும், தொழிற்சங்க மற்றும் கூட்டுறவு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்கள். வெவ்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் இணக்கமாக வேலை செய்கிறார்கள். ஆட்டோ தொழிலாளர்கள் என்கிற அடையாளம் அவர்களின் நனவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

தற்போது, 180 ஆட்டோ தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்க மற்றும் முறைசாரா கூட்டுறவு சங்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர். படிப்படியாக, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு சிறு நகரங்களுக்கும் தங்கள் செயல்பாட்டை விரிவுபடுத்தியுள்ளனர். ஆம்பூரில் 25 ஆட்டோ தொழிலாளர்களும், வாணியம்பாடியில் 50 பேரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இரண்டும் தோல் பொருட்கள் தொழில்களால் ஆதிக்கம் செலுத்தும் நகரங்கள் ஆகும், அங்கு பெரும்பாலான தொழிலாளர்கள் பெண்கள். இந்த அழைப்பு  – ஆட்டோ சேவையானது, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்களுக்கும், கூடுதல் நேர வேலை செய்துவிட்டு இரவு வெகுநேரங்களில் திரும்பும் பெண்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

கோயம்புத்தூரின் வெற்றியைப் பற்றி கேள்விப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்து வரும் ஆட்டோ தொழிலாளர்களும் அந்தந்த நகரங்களில் இதேபோன்ற சேவையைத் தொடங்க தொழிற்சங்கத்தை வலியுறுத்துகின்றனர். இந்த முயற்சியை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தவும் FITU திட்டமிட்டுள்ளது.

இந்த சோதனையின் சிறந்த விஷயம் என்னவென்றால், இது தொழிலாளர்களின் சுய ஒழுங்கமைப்பு சமூக நிறுவனமாகும். ஒத்துழைப்பு மற்றும் பகிர்வுணர்வு முக்கிய பிணைப்பு சக்தியாகும். பொதுவாக,  ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நபர்களாக உள்ளனர். அவர்களின் வேலையில் பாதுகாப்போ, வாழ்க்கையில் நிரந்தரத் தன்மையோ இல்லை. அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள், ஆனால் சட்டப்படி அவர்களுக்கு தொழிலாளர் அந்தஸ்து கூட இல்லை.

பொதுவாக, இந்த அழைப்புப் பணியாளர்கள் ஒரு அழைப்பிலிருந்து அடுத்த அழைப்பை நோக்கி உயிர்வாழ்கிறார்கள். இந்தச் சோதனை அவர்களின் வேலை மற்றும் வாழ்க்கைக்கு ஓரளவு நிரந்தரத் தன்மையை அளித்து அவர்களின் வருமானத்தை மேம்படுத்தியுள்ளது. கொரானா தொற்றுநோயால் ஏற்படும் துயரங்களை முறைசாரா தொழிலாளர்கள் எவ்வாறு வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல முன்மாதிரி.

Counter Currents இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்

தமிழில்: – தேவராஜன்

டாணாக்காரன் திரைப்படத்தின் விமர்சனம்…

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்