Aran Sei

2,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ‘கொக கோலா’ – வருவாய் குறைந்ததால் நடவடிக்கை என விளக்கம்

கொரோனா தொற்று காரணமாகவும் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதாகவும் கூறி கொக கோலா நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெள்ளியிட்டுள்ளது.

அட்லாண்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கொக கோலா நிறுவனத்தில் உலகம் முழுவதும் 85,000-ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் அமெரிக்காவில் மட்டும் 1200 நபர்கள் வேலையை இழக்கவுள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக உலகெங்கிலும் கொக கோலா பானத்தை விற்கும் உணவகங்கள், பார்கள், திரையரங்குகள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளது.

`உணவு இல்லை, வேலை இல்லை’- தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள்

இதனால் இந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் கடந்த ஆண்டை விட 9 சதவீதம் வீழ்ச்சியடைந்து சுமார் 64 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. இதையடுத்து செலவுகள் மற்றும் தயாரிப்புகளை குறைத்து நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வதாக கூறி 2,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கொக கோலா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அந்நிறுவனம் உற்பத்தி செய்துவரும் 430 பிராண்டுகளில் பாதியை குறைத்து 200 பிராண்டுகளை மட்டும் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விற்பனை பெரிதும் நடக்காத பிராண்டுகளான டேப், ஜிகோ தேங்காய் தண்ணீர், டயட் கோக், ஃபீஸ்டி செர்ரி மற்றும் ஓட்வாலா ஜூசஸ் ஆகிய பிராண்டுகளை மூடப்பட்டுள்ளதாக தி எகானாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

`அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

இந்த பிராண்டுகளை மூடுவதனால் கிடைக்கும் பணத்தை (ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய்) கொண்டு, வளர்ந்து வரும் பிராண்டுகளான மினிட் மெய்ட் மற்றும் சிம்ப்ளி ஜூசஸ் ஆகியவற்றிலும், சந்தைக்கு புதிதாக வெளிவரவுள்ள தயாரிப்புகளான டோபோ சிகோ ஹார்ட் செல்ட்ஸர், கோகோ கோலா எனர்ஜி ஆகிய பிராண்டுகளிலும் முதலீடு செய்ய இருப்பதாக கொக கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் கூடும் நாடாளுமன்றம் – விவாதிக்கப்படும் பிரச்சினைகள்

கோக் நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு கொக கோலா பாட்டில் விற்பனையாளர்களை பாதிக்காது என்று கூறப்பட்டுள்ளது. கொக கோலா பாட்டில் விற்பனையாளர் உட்பட உலகளவில் 7,00,000 க்கும் மேற்பட்டவர்கள் கோக் நிறுவனத்தை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கொக கோலா நிறுவனத்தில் பணிபுரியும் அமெரிக்க மற்றும் கனடாவைச் சேர்ந்த ஊழியர்கள் 4000 பேருக்கு பணஉதவியுடன் நிறுவனத்தில் இருந்து வெளியேற அழைப்பு விடுக்கப்பட்டது. அதை எவ்வளவுபேர் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்