Aran Sei

தடுப்பூசிகளை உடனே வழங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் – தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடா?

மிழகத்துக்கு 20 லட்சம் கொரோன தடுப்பூசிகளை உடனே அனுப்ப கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது, தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல்கட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி முடிந்த பிறகு, இரண்டாம் கட்டமாக இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது

இந்நிலையில், பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசிகளைச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் குறைந்தபட்சம் 10 நாள்களுக்குத் தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனே வழங்க வேணடும். அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டிய பயனாளிகள் காத்திருக்க வேண்டி வரும் என்பதால், அதை தவிர்க்கத் தமிழகத்துக்கு உடனடியாக தடுப்பூசியை அனுப்ப வேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐந்து மடங்காக உயர்ந்திருக்கும் ஆக்சிஜன் தேவை – நாளொன்றுக்கு 100 டன் தேவைப்படுவதாக  ராஜீவ் காந்தி மருத்துவமனை தகவல்

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சை மருந்தான ரெம்டெசிவிரை குறைந்த விலைக்கு மாநிலங்கள் பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும்  பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்