Aran Sei

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரகாண்ட் பாஜக அரசு முடிவு: இந்துத்துவ சட்டத்தை திணிக்கும் சதியென எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

த்தரகாண்டில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தற்போது நடைமுறையில் திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்தெடுத்தல், ஜீவனாம்சம் உள்ளிட்ட சிவில் விவகாரங்கள்  பல்வேறு மதத்தை பின்பற்றுவோருக்குத் தனிச் சட்டங்களாக உள்ளன.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும்: உத்திரகண்ட் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பல்வேறு சமயங்களைப் பின்பற்றுகிற மக்கள், பழங்குடிகள் வாழ்கிற இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த நாட்டில் தங்களுடைய சமய, கலாச்சார நம்பிக்கைகளைப் பாதுகாத்துக்கொள்கிற, பின்பற்றிக்கொள்கிற உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்துத்துவ சட்டத்தை அனைவர் மீதும் திணிக்கும் சதி சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் தனி பண்பாடுகளையும் சிதைக்கும் முயற்சியாகும்.

உத்தரகாண்ட் அரசின் இம்முயற்சிக்கு இந்திய நாட்டின் பன்முகத்தன்மை அக்கறைகொண்ட அனைவரும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும்.

பெண்களின் திருமண வயது உயர்வுக்கு பொது சிவில் சட்டமே நோக்கம் – திருமாவளவன்

நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அக்கறை காட்டாமல் பாஜக அரசு தொடர்ச்சியாக வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்வது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உத்தராகாண்ட் அரசின் பொது சிவில் சட்ட திணிப்பிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்