Aran Sei

க்ளப்ஹவுஸில் இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு பேச்சு: மூன்று பேரை கைது செய்த மும்பை காவல்துறை

க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று(ஜனவரி 20) இரவு, மும்பை குற்றப்பிரிவின் சைபர் காவல்துறையினர் அம்மூவரை கைது செய்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இஸ்லாமியப் பெண்களை இழிவு செய்யும் செயலி: உருவாக்கியவரின் ஜாமீன் மனு – தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

இச்சம்பவம் தொடர்பாக, இன்று(ஜனவரி 21) காலை, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, இந்த வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொண்டதற்காக காவல்துறையை பாராட்டியுள்ளார்.

மேலும், வெறுப்பு பேச்சு வேண்டாம் என சொல்லுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம்(ஜனவரி 19), க்ளப்ஹவுஸ் செயலி மற்றும் கூகுல் நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறை எழுதிய கடிதத்தில், இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துகள் கூறப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிளப்ஹவுஸ் ஆடியோ குழுவின் ஒருங்கிணைப்பாளர் குறித்த விவரங்களைக் கோரப்பட்டுள்ளது.

இஸ்லாமியர் மீதான வெறுப்புப் பேச்சுக்கும் கைது செய்யப்படுவார் யதி நரசிங்கானந்த் – காவல்துறை உறுதி

விசாரணையின் ஒரு பகுதியாக, இரு சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் குற்றம்சாட்டப்பட்ட அந்த க்ளப்ஹவுஸ் குழுவில் உறுப்பினர்களாக இருந்துள்ளதை காவல்துறை கண்டுபிடித்துள்ளதோடு, அவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Source: PTI

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்