Aran Sei

2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை ஆதரவு குரல்

யங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காஷ்மீர் ஊடகவியலாளர் ஆசிப் சுல்தானின் வழக்கை கண்காணித்து வருவதாக, ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜார்ஜ் குளூனி, அவரது மனைவியும் வழக்கறிஞருமான அமல் குளூனி ஆகியோரால் நடத்தப்படும், குளூனி பவுண்டேஷன் ஃபார் ஜஸ்டிஸ் (Clooney Foundations for Justice) (சி.எஃப்.ஜே) அமைப்பு தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 12, 2018 ஆம் தேதி ஸ்ரீநகரின் பாடமலூ பகுதியில் காவலரை சுட்டு கொன்ற பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிப் சுல்தான், இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், அமெரிக்க தேசிய பத்திரிக்கையாளர் சங்கத்தால், ‘ஜான் அபுச்சோன் பத்திரிக்கை சுதந்திர விருது’ வழங்கிக் கவுரவிக்கப்பட்ட சுல்தானின் வழக்கை, கடந்த ஆண்டு டைம்ஸ் இதழ் உலகம் முழுவதும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்த 10 மிக அவசர வழக்கில் ஒன்றாக குறிப்பிட்டிருந்தது.

பசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது

எதிர்கருத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட்டள்களை மோடி அரசு அணுகும் விதம் தொடர்பாக, சர்வதேச கண்காணிப்பின் ஒரு பகுதியாக, முக்கிய வெளிநாட்டு பிரபலங்கள் கவனித்து வருவதன் தொடர்ச்சியாக, குளூனி அறக்கட்டளையின் குரல் உள்ளது என தி வயர் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில், பர்வைஸ் புகாரி, குர்ரம் பர்வேஸ் மற்றும் பர்வீனா அஹங்கர் உள்ளிட்ட, காஷ்மீரின் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வழக்கு விசாரணையின், அடிப்படை தகவல் தொடர்பான விவரங்களை வழங்குமாறு, ஐநாவின் சிறப்பு நிருபர்கள், இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர்.

“சுல்தானின் ஜாமீன் மனுமீதான விசாரணை, சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின்படி நடத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதாகவும், அவருக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும், அவரது மனித உரிமைகளை மதிப்பளித்து, இதில் நியாயமான விசாரணை மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அவரது உரிமை பாதுக்காக்கப்பட வேண்டும்” சி.எஃப்.ஜே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தி வயர் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்

சுல்தானின் ஜாமீன் மனுமீதான விசாரணையை மார்ச் 16 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்த அடுத்த நாளில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

கொரோனா நடவடிக்கைகளை குஜராத் அதிகாரிகள் தவறாக அல்லது எச்சரிக்கும் விதமாக செய்தி வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் தவால் பட்டேல், முகநூல் பதிவு தொடர்பாக கைது செய்யப்பட்டுருக்கும் மணிப்பூர் எழுத்தாளர் கிஷோர் சந்திர வாங்கேம் ஆகியோரின் வழக்குகளை, ஏற்கனவே குளூனி அறக்கட்டளை கண்காணித்து வருகிறது

தி வயர் இணையதளத்திடம் பேசிய ஆசிப் சுல்தானின் தந்தை முகமது சுல்தான், அவரது மகனின் வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும் என மோடியின் அரசுக்குச் சர்வதேச அமைப்புகள் அழுத்தம் தருவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்

“ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆசிப்பை, கடைசியாக மார்ச் 12, 2020 ஆம் தேதி கொரோனா ஊரடங்கிற்கு முன்பு பார்த்தோம்” என முகமது தெரிவித்ததாக அதில் தி வயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக தி வயர் இணையதளத்திடம் தெரிவித்த ஆசிப்பின் வழக்கறிஞர் ஆதில் அப்துல்லா பண்டிட், ”வெள்ளிக்கிழமை மூன்று மணி நேரம் நடைபெற்ற வாதத்தை நீதிமன்றம் கேட்டது. இந்த வழக்கில் ஆசிப் தவறுதலாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதே எங்கள் வாதம்” எனக் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 20 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட இருப்பதாகவும், தி வயர் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் ஆசிப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்ட தேதியில் இருந்து, அவரது காவல் முடிவுக்கு வரும் 180 நாட்களுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, இந்தக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்