Aran Sei

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : காலநிலைமாற்றமே காரணம் – விஞ்ஞானிகள் தகவல்

credits : ny times

ஸ்திரேலியாவில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமையன்று, ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் பெய்த கன மழையால் ஆயிரக்கணக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு கடந்த 24 நான்கு மணி நேரத்தில் 25 சென்டிமீட்டர் கனமழை பெய்துள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸின் கடலோரப் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. அங்கு உள்ள பல அணைகள் நிரம்பியுள்ளன. சில இடங்களில் வெள்ளத்தால் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வெள்ள பேரிடர் தொடர்பாகப் பேசிய, ஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸின் அரசு அதிகாரி கிளாடிஸ் பெரிஜிக்லியன், ”18,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர், 38 பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

”ஒரு கடும் நோய்த்தொற்றைத் தொடர்ந்து, இது போன்ற மோசமான இயற்கை பேரிடரை ஆஸ்திரேலியா இதற்கு முன்னர் சந்தித்தது இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு, ஒராண்டுக்கு முன்னர் வரை, இப்பகுதிகள் கடும் வறட்சியை சந்தித்ததாகவும், கடுமையான  தண்ணீர் தட்டுப்பாடு நிலவியதாகவும் தி இந்துவின் செய்தி கூறுகிறது. மேலும், எதிர்பாராத காட்டுத்தீயினாலும் இப்பகுதி பாதிப்படைந்திருக்கிறது.

இந்த வெள்ளப்பெருக்கு காரணம் காலநிலைமாற்றம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவில் இது போன்ற கடுமையான இயற்கை பேரழிவுகளை அடிக்கடி சந்திக்க நேரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளதாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்