Aran Sei

‘நிழல்களைக் கொல்லும் நடுப்பகல்’ – ஆதாரம் இல்லாததால் உபா சட்டத்தில் கைதானவர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை

தீவிரவாதிகளோடு தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவர், அந்த வழக்கிலிருந்து போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டு, கடந்த ஜூன் 15 அன்று இரவு விடுதலையாகியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31, 2012 ஆம் ஆண்டு தீவிரவாதிகளோடு தொடர்புடையதாகக் கூறி முகமது இலியாஸ், முகமது இர்பான் உட்பட ஐந்து பேரை மஹாராஷ்டிர மாநில சிறப்பு காவல்துறை கைது செய்தது.

மக்களுக்காக நிற்பதே மனித அறம் – உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த கால்பந்தாட்ட வீரர்

இந்நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்து வந்த என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம், ஜூன் 15 அன்று, கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், முகமது இலியாஸ், முகமது இர்பான் ஆகிய இருவர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி விடுவித்தது.

இதனைத்தொடர்ந்து, இருவரும் ஜூன் 16 அன்று மும்பை நான்டெட்டில் அவர்களது வீட்டிற்கு ஒன்பது  ஆண்டுகளுக்கு பிறகு சென்றுள்ளதாகவும், இதுகுறித்து தெரிவித்த இர்பான்,”ஒன்பது ஆண்டுகளை இழந்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

கோவிட் ஷீல்டு தடுப்பு மருந்து கால இடைவெளியைக் குறைக்கவேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள்

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுவதற்கு முன்னர் இர்பான் இன்வெர்டர் மின்கலன் கடையும், முகமது இலியாஸ் பழக்கடை நடத்தி வந்ததாகவும், அவர்கள் சிறையில் இருந்தபோது விண்ணப்பித்த எண்ணற்ற பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இர்பான் குறைந்தபட்சம் நான்குமுறை பிணை கேட்டுத் தாக்கல் செய்ததாகவும், நான்கு முறையும் அந்த மனு நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த 2019 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம், முதற்கட்ட விசாரணையை மேற்கோள் காட்டி நம்பதகுந்த ஆதாரங்கள் இல்லை என்றுக் கூறி இர்பானுக்கு பிணை வழங்கிய நிலையிலும், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் என்.ஐ.ஏ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்கவே அடுத்த நான்கு மாதங்களிலேயே அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வீட்டின் எதிரே குப்பையைக் கொட்டுவதை தட்டிக்கேட்ட பட்டியல் சமூகத்தினர் மீது தாக்குதல் – வன்முறையில் ஈடுபட்டவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல்துறை

இந்நிலையில், நான்கு மாத பிணைக்கு பிறகு சிறைக்குள் அடைக்கப்பட்டது குறித்து தெரிவித்த இர்பான்,”நான் மீண்டும் சிறைக்கு செல்லவே கூடாது என்று நினைத்தேன், ஆனால் நான் சிறையிலிருந்த 7 வருடங்களைக் காட்டிலும் பிணைக்கு பிறகான 3 வருடங்கள் கடினமாக இருந்தது” என்று இர்பான் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த இலியாஸ், என் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை, ஏனென்றால் எங்களுக்கே அது தெரியும் என்று கூறியதாகவும், மேலும், “என்னிடம் போதிய பொருளாதார ரீதியில் (அ ) சட்டரீதியான வசதிகள் இருந்திருந்தால், என்மீது குற்றம் சுமத்துவதற்கான எந்த வித ஆதாரங்களுமின்றி என் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழந்திருக்க மாட்டேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்