Aran Sei

அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை வாங்கும் பேரணிகள் – கலவரத்தை ஏற்படுத்தும் சங்பரிவார்

யோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டத்தில் நடந்த நிதி திரட்டும் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர். மேலும், ஒருவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று என்டிடிவி செய்தி தெரிவித்துள்ளது.

இந்த மோதல் தொடர்பாக, கிட்டத்தட்ட 40 பேரைக் கைது செய்து வழக்கு பதிந்துள்ளது குஜராத் காவல்துறை. அவர்கள் மீது கொலை செய்தல், கலவரத்தை தூண்டுதல், சதி திட்டம் தீட்டுதல் போன்ற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அயோத்தியில் உயரமான ராமர் சிலை – நிலத்தையும் வீடுகளையும் இழக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள்

இதுகுறித்து, காயமடைந்த காவல்துறையினர் அளித்த புகாரில், “அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பேரணியின் போது, இரு சமூகத்தினருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. வலதுசாரி அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் நடத்திய இந்தப் பேரணியில், சத்தமாக மத கோஷங்களை எழுப்பினார்கள். இது மற்றொரு சமூகத்தைத் தூண்டும் விதமாக இருந்தது. அதை தொடர்ந்து, வாள்களையும் கம்புகளையும் கொண்டு இருபிரிவினரும் மோதலில் ஈடுபட்டார்கள்.” என்று கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த மோதல் குறித்து பேசிய குட்ச் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயூர் பாடில், “இந்தப் பேரணிக்கு அவர்கள் அனுமதியே வாங்கவில்லை. மோதலை கலைக்க காவல்துறை கண்னீர் புகை குண்டுகளை வீசியுள்ளது. ஜார்கண்டில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவரின் சடலம், மோதல் நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கிடைத்துள்ளது. இவர் இந்த மோதலால் தான் இறந்து போனாரா என்று விசாரித்து வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

அயோத்தியில் புதிய மசூதி – குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழா

இதே போன்ற மோதல்கள், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உஜ்ஜனி மற்றும் மண்ட்சவுர் மாவட்டங்கள் உட்பட நாட்டில் பல பகுதிகளில் நடந்த ராமர் கோயில் நிதி திரட்டும் பேரணிகளில் ஏற்பட்டுள்ளன.

நேற்று (ஜனவரி 18), அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், நன்கொடையாக 1,11,111 ரூபாயை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்துள்ளார். அதற்கான காசோலையுடன் இரண்டு பக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார்.

 

மதவாதத்தால் தகர்க்கப்பட்ட அயோத்தியின் நல்லிணக்க பாரம்பரியம்

அக்கடிதத்தில், “லத்திகளையும் வாள்களையும் சுமந்துகொண்டு, வேண்டுமென்றே ஒரு சமூகத்தைத் தூண்டும் நோக்கில் கோஷங்களை எழுப்புவது எந்தவொரு மத விழாவின் பகுதியாகவும் இருக்க முடியாது. அதனால், இத்தகைய நடவடிக்கைகள் இந்து மதத்தை சார்ந்ததாக இருக்க முடியாது. இவற்றின் காரணமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே மூன்று அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இது சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.” என்று உஜ்ஜைன், இந்தூர் மற்றும் மாண்ட்சவுர் மாவட்டங்களில் ஏற்பட்ட மோதல்களை திக்விஜய சிங் மேற்கோளிட்டுள்ளார்.

 

அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1,11,111 நன்கொடை – பிரதமருக்கு அனுப்பிய காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்

“மற்ற மத சமூகங்கள் கோயில் கட்டுமானத்திற்கு எதிரானவை அல்ல என்பதை நீங்கள் (பிரதமர் மோடி) அறிந்திருப்பீர்கள். ஆகவே நாட்டின் பிரதமராக இருக்கும் நீங்கள், ஆயுதங்களை ஏந்தியபடி, பிற சமூகங்களைத் தூண்டும் விதமாக நிதி திரட்டும் ஊர்வலங்களை நிறுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்துங்கள்.” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் கோரியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்