Aran Sei

காஷ்மீரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டதாக வெளியான செய்தி – உண்மை என்ன?

காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் லால் சௌக் பகுதியில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டதாக சமூக வலைதளங்களில் படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இதில் உண்மை இல்லை என்பது ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் தேடுதலில் தெரியவந்துள்ளது.

ஹிந்து யுவா வாகினி அமைப்பின் குஜராத் பிரிவு பொறுப்பாளர் யோகி தேவநாத், “32 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது, பிரதமர் மோடி மற்றும் உளதுறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நன்றி” என பதிவிட்டிருந்தார்.

சுதர்ஷன் செய்தி ஊடகத்தின் தலைவர் சுரேஷ் சவ்ஹங்கே, வலது சாரி பிரச்சார ஊடகமான ஆப் இந்தியா மற்றும் செய்தி ஊடகங்களான ஜீநியூஸ், நியூஸ்18, நயி துனியா, விடிவி குஜராத்தி, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரமான ஊடகமான ஆர்கனைசர் ஆகிய ஊடகங்கள் இதே செய்தியை வெளியிட்டிருந்தன.

Photo Credit : The Wire

நியூஸ்18 அகமதாபாத் பிரிவு தலைவர் ஜனக் தேவ், டைனிக் பாஸ்கர் ஊடகத்தைச் சேர்ந்த ஹிமான்ஷு மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலின் மகன் சௌரியா தோவலும் கிருஷ்ண ஜெயந்தி தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர்.

உண்மைத்தன்மை

32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பதிவுகளில் கூறப்பட்டிருப்பது உண்மையில்லை, என ஆல்ட் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பதிவுகளில் பகிரப்பட்ட படங்கள் கெட்டி இமேஜ்ஸ் (2004, 2013), ராய்ட்டர்ஸ் (2005 மற்றும் 2006) மற்றும் அலமி (2007 மற்றும் 2012) ஆகிய இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Photo Credit : Alamy

”2018 ஆம் ஆண்டில் தகவல்கள் வெளியாகியுள்ளது என்றும், 2004 ஆம் ஆண்டில் இருந்து லால் சௌக் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருவதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார் என்றும் கிரேடர் காஷ்மீர் செய்தி வெளியிட்டிருள்ளது.

”1989 ஆம் ஆண்டு தீவிரவாதம் வெடித்ததில் 2007 ஆம் ஆண்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. முதன்முறையாக பண்டிதர்களால் உருவாக்கப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் லால் சௌக் பகுதி வழியாக சென்றது” என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இஸ்கான் குழுவைச் சேர்ந்த சந்தீப் கௌல், “2007 ஆம் ஆண்டில் இருந்து எங்கள் அமைப்பு கிருஷ்ண ஜெயந்தி விழாக்களை ஒருங்கிணைத்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு லால் சௌக் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்தோம். சமூக வலைதளங்களில் தெரிவித்தைப் போல 32 ஆண்டுகளுக்குப் பிறகு  கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை” என ஆல்ட் நியூஸ் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.

Source : Alt News

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்