Aran Sei

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கடிதம் எழுதிய ஐந்தாம் வகுப்பு மாணவி – பொறுப்புள்ள குடிமகள் என்று பாராட்டி பதில் கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி

க்சிஜன் பற்றாக்குறை மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்  இறப்பது குறித்து,  நீதிமன்றம் தலையிட்டதை பாராட்டி, கேரளாவை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி எழுதிய கடிதத்திற்கு, உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி என்.வி.ரமணா பதிலளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா – எஸ்.ஏ. பாப்டேவின் பரிந்துரையை ஏற்ற குடியரசு தலைவர்

கடந்த மாதம் , கேரள மாநிலம் திரிசூர் மாவட்டம், கேந்திரிய வித்யாலயா பள்ளியைச் சார்ந்த மாணவி லித்வினா ஜோசப் எழுதிய கடிதத்திற்கு, அவர் பதிலளித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

லித்வினா ஜோசப் எழுதிய  அந்த கடிதத்தில், நீதிபதி கொரோனா வைரஸை தனது சுத்தியலால் உடைப்பது போன்ற ஓவியத்தையும் இணைத்து, கொரோனா தடுப்புப் பணியில் நீதிமன்றம் தலையிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டியும்,டெல்லி உள்ளிட்ட பலபகுதிகளில் கொரோனாவால் பலர் இறந்தது குறித்து வருத்தம் தெரிவித்தும் அந்த சிறுமி அந்த கடிதத்தை எழுதியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிறார் என்.வி.ரமணா – தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே பரிந்துரை

இந்நிலையில், தனது தீவிர பணிகளுக்கு மத்தியிலும் தலைமைநீதிபதி என்.வி.ரமணா லித்வினா ஜோசப்பிற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், “அன்புள்ள லித்வினா, கொரோனா காலத்தில் இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் கவனித்ததும், மக்களின் மீதான தொடர்ந்து உங்கள் அக்கறையும் என்னை வெகுவாக ஈர்க்கிறது. மேலும், இந்த தேசத்தைக் கட்டமைக்க பங்களிக்கும் விழிப்புணர்வுள்ள,பொறுப்பான குடிமகளாக நிச்சயமாக நீங்கள் வளர்வீர்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

சி.பி.ஐ புதிய இயக்குநரை  தேர்தெடுப்பதில் அரசின் செயல்பாடுகள் ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளது- தேர்வுக்குழு உறுப்பினர் அதிர் சௌதிரி குற்றச்சாட்டு

மேலும், வாழ்த்துகள் உனது அனைத்து வெற்றிகளுக்கும் உன் ஆசிர்வாதங்கள் என்றும் தனது கடிதத்தில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி என்.வி.ரமணா பதிலளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்