Aran Sei

சட்டம் இயற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் தரம் இல்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வருத்தம்

ட்டம் இயற்றும் நாடாளுமன்ற விவாதங்கள் ‘வருந்ததக்க நிலையில்’ தரமற்று உள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, பல ஆண்டுகளாக சட்டம் இயற்றும் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது குறித்து பேசியபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”இப்போது ஒரு வருந்ததக்க நிலை உள்ளது. சட்டங்களில் நிறைய தெளிவின்மை உள்ளது. எந்த நோக்கத்திற்காக அவை இயற்றப்படுகின்றன என்று எங்களுக்குத் தெரியாது. சட்டங்களுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளால் நீதிமன்றம், மக்கள் மற்றும் அனைவருக்கும் அசௌகரியம் ஏற்படுகிறது” என அவர் கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்தை வழக்கறிஞர்கள் வழிநடத்தினர் என சுட்டிக்காட்டிய ரமணா, “அப்போது அவையில் நடைபெற்ற விவாதங்களும், கலந்துரையாடல்களும் ஆக்கப்பூர்வமாக இருந்தன. விவாதங்கள் விரிவாக நடைபெறும்போது சட்டங்கள்குறித்து விவாதிக்க முடியும்… துரதிருஷ்டவசமாக ஒரு காலத்திற்கு பிறகு… அவையில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். சட்டங்கள்குறித்து தரமான விவாதம் இல்லாதபோது, அது இயற்றப்படும் நோக்கம்குறித்து நீதிமன்றங்களுக்குத் தெரிவதில்லை” என உரையாற்றியுள்ளார்.

வழக்கறிஞர்கள் அவர்களது பங்களிப்பைச் சட்ட நடைமுறை மற்றும் வீடுகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் பொது வாழ்க்கையில் தீவிரமாக பங்கேற்றால் அவையில் ஏற்படும் அறிவார்ந்த விவாததிற்கான தட்டுப்பாடை நீக்க முடியும் என ரமணா கூறியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு, காந்தி போன்ற தலைவர்கள் வழக்கறிஞர்களாக இருந்தனர் எனக்கூறிய ரமணா, அவர்கள் போராட்டத்திற்காக தொழிலை மட்டுமல்ல, அவர்களது குடும்பங்களையும் சொத்துக்களையும் கூட தியாகம் செய்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின் பங்களிப்பு மகத்தானதாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்