ஒன்றிய அரசு மருத்துவ துறையில் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து உடனடி கவனம் செலுத்தவில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மத்தியில், மருத்துவர்கள் தங்கள் மேல் தொடுக்கப்பட்ட வன்முறைகளை பாறை போன்று தாங்கிக்கொண்டனர் என்றும், மருத்துவர்கள்மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகவும் நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, “இந்த தசாப்தம் நமது மருத்துவர்களின் தியாகத்தாலும், அவர்களின் அரவணைப்பாலும் வருணிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளதாகவும் தி இந்து செய்தி தெரிவிக்கிறது.
மேலும், இந்திய மருத்துவ சங்கத்தின் புள்ளி விவரப்படி 780 மருத்துவர்கள் கொரோனாத் தொற்றால் இறந்துள்ளதாகவும், மருத்துவர்கள் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை, காலாவதியான தொழில்நுட்பங்கள், அடிப்படை வசதிகள் போன்ற பிரச்சனைகள் குறித்து ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்தவில்லை என்று நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, எழுந்துள்ள இந்த பிரச்சனைகள்குறித்து ஒன்றிய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென மருத்துவ அமைப்புகள் விரும்புகின்றன எனவும், அப்போது தான் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜூலை முதல் வாரத்தில் நமது வாழ்த்துகளை தெரிவிக்க இயலும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.