Aran Sei

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகிறார் என்.வி.ரமணா – தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே பரிந்துரை

ச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிக்கத் தற்போதைய தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்குப் பாப்டே எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஏ. பாப்டேவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி முடிவடைவடைவதால், அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்குமாறு பாப்டே கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 24 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் விழாவில் உச்சநீதிமன்றத்தின் 48வது நீதிபதியாகப் பதவியேற்க இருக்கும் என்.வி. ரமணா ஆகஸ்ட் 26, 2022 ஆம் ஆண்டுவரை உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகிப்பார்.

‘பதவிக்காலத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெறும் அதிகாரிகள்’ – அரசின் அழுத்தம்தான் காரணமா?

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் மீது நாடு முழுவதும் உள்ள வழக்குகளை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தை நிராகரித்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் என்.வி. ரமணா, ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னவரம் கிராமத்தில் ஆகஸ்ட் 27, 1957 ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்