Aran Sei

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை – பத்திரிக்கை சுதந்திரம், மத சுதந்திரம் தொடர்பாக சமூக அமைப்புகளுடன் உரையாடல்

credits : the hindu

பத்திரிகையாளர்கள் கைது, இஸ்ரேலின் உளவு மென்பொருளான பெகசஸால் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டது, விவசாயச் சட்டங்கள் தொடர்பாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடியது தொடர்பாக சிவில் சமூக அமைப்புகள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஆண்டனி பிளிங்கனிடம் முறையிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஆண்டனி பிளிங்கன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, சிவில் சமூக அமைப்புகளுடன் 45 நிமிட கலந்துரையாடலை நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

அதில் பேசிய அவர், ட்ரம்ப் ஆதரவாளர்களால் வெள்ளை மாளிகையில் நடந்த தாக்குதல்களை குறிப்பிட்டு, இந்தியா அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

லவ் ஜிகாத் வதந்தி – காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்ட இஸ்லாமியத் தம்பதியர்

மேலும், ”இந்திய மற்றும் அமெரிக்க மக்கள் சட்டத்தின் ஆட்சிக்கும், மனித மாண்புக்கும் மதிப்பளிக்க கூடியவர்கள். அடிப்படை சுதந்திரங்களான மத சுதந்திரம் உட்பட அனைத்திலும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள். இது போன்ற சுதந்திரங்கள் தான் ஜனநாயகத்தின் அடிப்படையான கூறுகள்” என தெரிவித்துள்ளார்.

காதலர் தினம் – பாஜகவினர் “லவ் ஜிகாத்” தாக்குதல் : ” இது டிரெய்லர்தான், அடுத்த முறை கொன்று விடுவோம்”

தொடர்ந்து பேசிய அவர், ”அனைத்து மக்களின் பிரதிநிதிகளும் அரசாங்கத்தில் இடம் பெற வேண்டும், அவர் யாராக இருந்தாலும் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும், என்பதையே நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

இதையடுத்து, இந்தியாவில் நடந்த போராட்டங்களும், மோடி அரசு அதை எதிர்கொண்ட விதம் தொடர்பாக உரையாடல் நடந்தது. அப்போது பல்வேறு பிரதிநிதிகள் மத சுதந்திரம் தொடர்பாகவும், மோடி அரசு கொண்டு வந்திருக்கும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும், சர்வதேச அளவில் விமர்சனத்தைப் பெற்றுள்ள லவ் ஜிகாத் சட்டம் தொடர்பாகவும் பிளிங்கனிடம் தெரிவித்துள்ளனர்.

‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து

மேலும், பத்திரிகையாளர்கள் கைது, இஸ்ரேலின் உளவு மென்பொருளான பெகசஸால் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டது, விவசாயச் சட்டங்கள் தொடர்பாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடியது தொடர்பாகவும் அந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.

” ‘லவ் ஜிகாத்’, மாட்டிறைச்சி குறித்து கருத்து சொல்ல முடியாது ” – நேர்காணலை விட்டு வெளியேறிய கேரள பாஜகவின் மெட்ரோமேன் ஈ ஶ்ரீதரன்

இந்தச் சந்திப்பிற்கு பின், பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார். பிளிங்கனுடன் வந்த அமெரிக்க அதிகாரிகள், இந்த பிரச்சனைகள் தொடர்பாக மனித உரிமை அமைப்புகளை அணுகலாம் என கூறியுள்ளார்.

CREDITS : THE HINDU

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்