Aran Sei

மார்ச் 28, 29 தேதிகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் – மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக் கூடாது, தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பைத் திரும்பப் பெற வேண்டும்; பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்; முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக் கூடாது; விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உரிமைகளைத் தட்டிப் பறிக்கக் கூடாது; உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 28, 29 தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் முன்னின்று நடத்தும் நாடு தழுவிய போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கிறது.

ஜோமேட்டோவின் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் சாலை விபத்துகளுக்கே வழிவகுக்கும் – மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர்

சுமார் 25 கோடி பேர் பங்கேற்பர் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து சேவைகள், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் மீது அக்கறைக் கொண்டுள்ள அரசாக இருந்தால் ஒன்றிய அரசு தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால் போராட்டத்தை நசுக்க பல்வேறு வகையிலான முயற்சியை ஒன்றிய அரசு செய்து வருவதாகத் தெரிகிறது. கோரிக்கைகள் மிகவும் நியாயமானதாக இருப்பதால் பொதுமக்களின் ஆதரவும் பரவலாக இப்போராட்டத்திற்கு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் பங்குகொள்வர் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்