Aran Sei

‘தாலிபான்கள் ஆட்சியில் குடிமக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும்’ – ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை

ப்கானிஸ்தானில் தலிபான்கள் இஸ்லாமிய கொள்கைகளைப் பின்பற்றி நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புவதாக  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்கு நடைபெற்ற போரில் ஆப்கானிஸ்தான் அரசை வீழ்த்தி தாலிபானகள், இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்திருந்தனர், அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசு அமைப்பது குறித்து பேசிய பரூக் அப்துல்லா, “அவர்கள்(தாலிபான்கள்) எல்லா நாடுகளோடும் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புவதாக கூறிய அவர்,  குடிமக்களின் மனித உரிமை மான்புகளைக் காப்பாற்றுவார்கள் என்றும் சிறந்த இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவாக்க வேண்டும் என்றும்  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா  கூறியுள்ளார்.

தாலிபான்கள் ஏற்படுத்தியுள்ள அரசின் செயல் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த்தை அறிவித்துள்ளனர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்