Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க 5 ஆவது முறையாகக் கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

image credit - indianexpress.com

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 5 ஆவது முறையாகக் கூடுதல் காலக்கெடுவைக் கோரியுள்ளது என்று ஒன்றிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: விதிகளை உருவாக்க கால அவகாசம் கோரிய ஒன்றிய அரசு

மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு 2022 ஜனவரி 9 அன்று முடிவடைந்த நிலையில், உள்துறை அமைச்சகம் உரிய விதிகளை இன்னும் அறிவிக்கவில்லை என்பதால், இச்சட்ட விதிகளை உருவாக்க நான்காவது முறையாக மேலும் 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அக்டோபர் 9 ஆம் தேதிவரை இந்த கால நீட்டிப்பை வழங்குவதற்கான கோரிக்கை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கத்தில் உள்ள ஒரு மூத்த அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். இது ஐந்தாவது முறையாக ஒன்றிய அரசு கோரும் கால நீட்டிப்பாகும். கொரோனா நோய்த்தொற்றினால் கால தாமதம் ஏற்பட்டு வருவதாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிஏஏ சட்டத்தின் விதிகளை வகுக்க 2022 ஜனவரி வரை கால அவகாசம் : மக்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்

2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை, அசாம், உத்தரபிரதேசம், கர்நாடகா, மேகாலயா மற்றும் டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் 83 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், ஏன் மதரீதியாக குடியுரிமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது – ஒன்றிய அரசுக்கு ஐ.யூ.எம்.எல் கேள்வி

இந்திய நாடாளுமன்ற விதிகளின்படி, ஒரு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டால், அடுத்த ஆறு மாதத்துக்குள் அந்தச் சட்டத்துக்கான விதிகளை வகுக்க வேண்டும் அல்லது அவகாசம் பெற வேண்டும் என்பது நினைவுகூரத்தக்கது.

Source : The Hindu

இந்திய நாடாளுமன்றத்தில் உளறி கொட்டிய ஒ.பி.எஸ்ஸின் மகன் ஒ.பி.ரவிந்தர நாத், கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

மாநிலங்கள் தங்களுக்கு பேச இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர்வின் கருத்துக்கு ஊடகவியளாலர் ஜீவசகாப்தன் பேசியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்