Aran Sei

ஜெய் ஸ்ரீராம் என முழங்க வற்புறுத்தப்பட்டு தாக்கப்பட்ட கிறுஸ்துவ பாதிரியார் – வழக்கு பதிந்துள்ள டெல்லி காவல்துறை

Credit : The Wire

டெல்லயில் ’ஜெய் ஸ்ரீராம்’ என முழங்க கட்டாயப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பாதிரியார் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிப். 25 தேதி, டெல்லியின் ஃபதேபுரி பெர்ரி பகுதியில், கட்டாய மதமாற்றம் செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டி, அடையாள தெரியாத நபர்களால், பாதிரியார் கெலோம் டெட் தாக்கப்பட்டார். இது தொடர்பாக இரு தினங்களுக்குப் பிறகு புகார் தெரிவிக்கப்பட்டதாக மைதான் கர்ஹி காவல்நிலையம் தெரிவித்துள்ளது.

”பிப் 27 தேதி மாலை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று டெல்லி காவல்துறையினர் கூறியதாக ஸ்குரால் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனக்கெதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்ட என் சகோதரர்கள் நல்வழிபடுவார்கள் – முஸ்கான் கான்

இது தொடர்பாக செய்தியை ஸ்குரால் இணையதளம் வெளியிட்ட அடுத்த நாள் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக ஸ்குரால் தெரிவித்துள்ளது.

ஸ்குரால் இணையதளத்தின் ஊடகவியலாளர் ஐஸ்வர்யா எஸ் ஐயர் பதிவு செய்திருக்கும் ட்விட்டர் பதிவில், சாலையில் ஒரு கம்பத்தில் கட்டப்பட்ட கெலோம் டெட்டை ஒரு கும்பல் தாக்குவதைக் காட்டும் காணொளி  பதிவாகியுள்ளது.

18 ஆண்டுகளாக தெற்கு டெல்லியின் அசோலா பகுதியில் குடியிருப்பதாக தெரிவிக்கும் 35 வயதான கெலோம் டெட், 15 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் காலணி பகுதியில் இதே போன்றதொரு ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

டெட் அளித்த புகாரில் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 365 (ஒரு நபரை ரகசியமாக அல்லது தவறான எண்ணத்தில் கடத்துதல்), 323 (திட்டமிட்டு காயப்படுத்துதல்), 341 (தவறான நடத்தை), 34 (பொதுவான நோக்கத்தின் பெயரில் பல நபர்கள் ஒரு செயலில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய இடத்தில் “ஜெய் ஸ்ரீராம்” முழக்கம் – குருகிராமில் தொடர் கதையாகியுள்ள இதுபோன்ற நிகழ்வுகள்

பிப். 25 தேதி நண்பரைச் சந்தித்து விட்டு, பணிக்கு திரும்பும் போது இந்த கும்பலால் தாக்கப்பட்டதாக கெலோம் டெட் அவரது புகாரில் தெரிவித்துள்ளார்.

”சுமார் 100 பேர் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஒருவர் கூட என்னை காப்பாற்ற முன்வரவில்லை. என்னை அடித்துத் துன்புறுத்தியதை அவர்கள் கானோளியாக எடுத்தனர். ஆனால், உதவ முன்வரவில்லை. பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல வைத்து, என்னை அடிக்க வைக்க அவர்கள் முயன்றனர். இந்த சம்பவம் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்