Aran Sei

தாதாக்களின் தபால் தலைகள் – தபால் துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்

த்திர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஒரு தபால் நிலையத்தில், நிழலுலக தாதாக்கள் சோட்டா ராஜன் மற்றும் முன்னாபஜ்ரங்கி ஆகியோரின் புகைப்படங்களோடு தபால் தலைகள் வெளியாகியுள்ளன என டெக்கான் ஹெரல்டு செய்தி வெளியிட்டுள்ளது.

தபால் நிலையத்தில் ‘மை ஸ்டாம்ப்’ எனும் வசதியின் கீழ், மக்கள் ஒரு தொகையை செலுத்தி, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தபால் தலைகளை பெற முடியும். இதற்காக, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும், அடையாள நிரூபண ஆவணங்களையும் தபால்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்ட கல்யான்பூர் இளைஞர் ஒருவர், இந்த இரண்டு குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து தபால் தலைகள் அச்சிட்டு வாங்கியுள்ளார். கான்பூரில் உள்ள பாரா சௌஹாரா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்தி பத்திரிக்கை ஒன்றில் வேலை செய்யும் அந்த இளைஞர், தபால் துறை எப்படி மோசமாக இயங்குகிறது என்பதை அம்பலப்படுத்தவே இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

இது குறித்து டெக்கான் ஹெரால்டு மூத்த தபால் அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, “என்ன நடந்தது என்பதை கவனித்துள்ளோம். இதை முழுமையாக விசாரிப்போம். முறையான அடையாள நிரூபண ஆவணங்கள் இல்லாமல் ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் தபால் தலைகள் வெளியிட முடியாது. உயிரோடு இருக்கும் நபரின் பெயரில் மட்டும் தான் தபால் தலை வெளியிட முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

நிழலுலக தாதாவான முன்னா பஜ்ரங்கி, 2018 ஆம் ஆண்டு பாக்பாட் சிறையில் கொலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்