Aran Sei

என்டிஏ கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை சிராக் பஸ்வான் புறக்கணிப்பு: காரணம் என்ன?

Credits: indian express

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு விடுத்த அழைப்பை உடல்நலத்தை காரணம் காட்டி லோக் ஜனகச்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் புறக்கணித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அக்கூட்டத்தில் பங்கேற்க லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானுக்கு கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம்மூலம் அழைப்புவிடுத்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

நிதீஷ் குமார் – பாஜகவின் “நியமன” முதல்வர் : எதிர்க்கட்சிகள் குத்தல்

அதற்குப் பிகாரில் ஆளும் பாஜக கூட்டணியின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு)கட்சி  தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளமியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஜேடியு கட்சியின் மூத்த தலைவர் கே.சி. தியாகி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தபோது, ”கடந்த தேர்தலில் ஜேடியு கட்சி உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் சேர்த்து கடுமையாக விமர்சித்துவிட்டு சிராக் பஸ்வான் எப்படி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியும்” எனக் கேள்வியெழுப்பி இருந்தார்.

பிகாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றக் காரணத்தால், லோக் ஜனசக்தி கட்சி அந்தக் கூட்டணயிலிருந்து இருந்து விலகித் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

ராம்விலாஸ் பாஸ்வானின் மரணத்தில் சர்ச்சை – பிரதமருக்குக் கடிதம்

மேலும், சிராக் பஸ்வான் அக்கூட்டத்தில் பங்கேற்றால் ஜேடியு கலந்துகொள்ளாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்ட காரணத்தால் பாஜக, சிராக் பஸ்வானை வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மறுபுறம் உலநலக்குறைவு காரணமாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவில்லையென சிராக் பஸ்வானே தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. ஆனால் என்டிஏ கூட்டணி கட்சியின் கூட்டம் காணோளி வாயிலாக நடைபெற்றது நினைவுக்கூரத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ”விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதிலளடி கொடுக்க வேண்டும்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், “கொரோனா பெருந்தொற்று நீங்கியபிறகு உருவாகபோகும் புதிய உலகிற்கு, புது வடிவம் அளிப்பதில் இந்தியாவிற்கு பெரும் பங்குள்ளது. அடுத்து வரும் பத்தாண்டுகள் என்பது இரண்டாம் உகப்போர் நடந்து முடிந்த அடுத்து வந்த பத்தாண்டுகளை போல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதில் நாம் ஒருபோதும் அமைதியான பார்வையாளராக இருக்கபோவதிலை” என பிரதமர் மோடி தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவு செய்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்