Aran Sei

போலி செய்தியைப் பரப்பிய இந்துத்துவவாதிகள் : உண்மையை உடைத்த சின்மயி

credits : the hindu

ந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவியுள்ளதாக இந்துத்துவவாதிகள் செய்த போலி பிரச்சாரத்தை, பின்னணி பாடகி சின்மயி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தோலுரித்துள்ளார்.

இந்தியாவில் நேற்றைய தினம், 3.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.79 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் 2,01,186 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,293 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் கடுமையாக அதிகரித்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட இடம் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் நோயாளி உயிரிழப்பு – மருத்துமனையை சேதப்படுத்திய நோயாளியின் உறவினர்கள்

இந்தச் சூழலில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில், ஆர்எஸ்எஸ் அமைப்பு 45 ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையையும் 6000-ம் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை நிறுவி இருப்பதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இது, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கொரோனா சிகிச்சை மையம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர், வானதி ஸ்ரீநிவாசனின் பெயரில் இருந்த போலி கணக்கால் பகிரப்பட்டுள்ளது.

“எக்காரணத்திற்காகவும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது” – தொடங்கியது மக்கள் போராட்டம்

இந்நிலையில், பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபதா, எனக்கு இந்தி படிக்கத் தெரியாததால், இதை ஏறக்குறைய நம்பி விட்டேன். இந்தப் புகைப்படத்தில் இருக்கும் போஸ்ட்ரிலேயே, அந்தக் கட்டிடத்தில் பெயர் ராதா சவோமி சத்சங் பியஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ராஷ்ட்ரிய சுய சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) அல்ல. அங்கு இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையும் வெறும் 600 தான், 6000-ம் அல்ல. இந்த அமைப்பு (ராதா சவோமி சத்சங் பியஸ்) 2009-ம் ஆண்டு முதலே செயல்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்