Aran Sei

சீனா – விமான நிலையத்தில் காணாமல் போன சட்ட உரிமை ஆர்வலர் – அதிகாரிகள் தகவல் மறுப்பதாக சகோதரி குற்றச்சாட்டு

மெரிக்காவில் உள்ள குடும்பத்தைக் காண அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்த சீன சட்ட உரிமை ஆர்வலர் குவோ ஃபிக்ஸியோங்கை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகவும், ஃபிக்ஸியோங் குறித்து அதிகாரிகள் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை  என்றும் அவரது சகோதரி யாங் மாப்பிங் குற்றஞ்சாட்டியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு விமானம் ஏற வியாழக்கிழமை (பிப்ரவரி 4) ஆம் தேதி ஷாங்காயின் புடான் விமான நிலையத்திற்கு வந்தபோது தடுத்து வைக்கப்பட்டாரெனக் கூறப்படுவதாகவும், இதுகுறித்து காவல்துறையினரிடம் எந்தத் தகவலும் இல்லை எனவும் யாங் மாப்பிங் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருக்கும் மனைவியைச் சந்திக்க தன்னை சீனாவிலிருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாகத் தனது நண்பர்களிடம் குவோ தெரிவித்ததாக அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

பணக்கார விவசாயிகள், உலகளாவிய சதிகள், உள்நாட்டு முட்டாள்தனம் – பி சாய்நாத்

இது தொடர்பாகத் தனது நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில், ”நான், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இன்ன பிற குற்றங்களுக்குக் காரணமாக இருப்பேன் எனச் சந்தேகிக்கப்படுவதால், எனக்கு இந்த நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி நான் காலவரையரையற்ற உண்ணாவிரதத்தில்  ஈடுபடப் போகுறேன், இதன் மூலம் சீன மக்கள், உலக மக்கள் மற்றும் அரசாங்கங்களை உதவிக்கு அழைப்பேன்” எனக் கூறியிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவோ, அரசுக்கு எதிரான விமர்சகர்களுக்கு உதவியதாக, சீனாவின் வரையறுக்கப்பட்ட மாநில பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், சீனாவின் ஆளும் கம்யூனிச அரசாங்கம், வழக்கு மற்றும் நீண்ட சிறை தண்டனைக்கு முன்பாக அடிக்கடி பயணத் தடைகளை விதிப்பதாகவும் என அதில் குறிப்பிடப்படுள்ளது.

‘பிரதமர் கருணையைப் பற்றி பாடம் எடுப்பதை விடுத்து, போராடும் விவசாயிகளுக்கு கருணை காட்டுங்கள்’ – திரிணாமூல்

குவோ வின் மனைவியின் உடல்நிலை, அவருக்கு அதிகாரத்துடனான மற்றொரு மோதலுக்கு ஆளாக்கியுள்ளது என்றும், குவோ வின் மனைவியின் உடல்நிலையை விட குவோ குறித்து தகவல் இல்லாதது வருத்தமளிக்கிறது” என்று யாங் குறிப்பிட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்