மூன்று சீன தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ராணுவத்துடன் தொடர்பு இருப்பதாக அமெரிக்க அரசு கூறியதைத் தொடர்ந்து அந்நிறுவனங்களை நியூயார்க் பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. தற்போது, சீனா அதன் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க ‘தேவையான நடவடிக்கைகளை’ எடுக்கும் என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன ராணுவத்திற்கு சொந்தமானது அல்லது கட்டுப்படுத்தப்படுவதாக வாஷிங்டன் கூறும் 31 நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டைத் தடுக்க நவம்பர் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து சீனா மொபைல், சீனா யூனிகாம் மற்றும் சீனா டெலிகாம் ஆகியவற்றை பட்டியலில் இருந்து நீக்குவதாக நியூயார்க் பங்குச் சந்தை 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கூறியது.
“நாங்கள் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளோம்” – இஸ்லாமியர்களை பழிவாங்கும் உத்தரபிரதேச அரசு
“சீன நிறுவனங்களை அடக்குவதற்கு இந்த வகையான தேசிய பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது சந்தை விதிகளுக்கு இணங்காது” என்று சீன வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இது சீன நிறுவனங்களின் சட்ட உரிமைகளுக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், அமெரிக்கா உட்பட பிற நாடுகளில் முதலீட்டாளர்களின் நலன்களையும் பாதிக்கிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
நிறுவனங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய சீன அமைச்சகம், இருதரப்பு வர்த்தக உறவுகளை மீண்டும் கொண்டுவரவும் வலியுரித்துள்ளது.
கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா
ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனவரி 20-ம் தேதி பதவியேற்கவுள்ளார். பதவியின் இறுதி காலத்தில் இருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு எதிரான தனது கடுமையான நிலைப்பாட்டை முடுக்கிவிட்டுள்ளது என்று தி இந்து இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற தொடர்ச்சியான பிரச்சினைகள் காரணமாகப் பொருளாதார ரீதியில் பெரிய நாடுகளான இவற்றுக்குஇடையே சிக்கல் அதிகரித்து வருகின்றன.
பாய்டனின் வெற்றி இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க உதவும் என்று சீன இராஜதந்திரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.