Aran Sei

இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி – சீன செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கவுள்ளதாக சீன செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 40 வென்டிலேட்டர்கள், இதர மருத்துவ உபகரணங்கள், முதல் தவணையாக சீன செஞ்சிலுவை சங்கத்தால் இந்தியாவிற்கு அனுப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்தோங் கூறியுள்ளார்.

மூன்று ஆஸ்கார் விருதுகள் வென்ற சீன இயக்குனரின் செய்திகளுக்கு தடை – சமூகவலைத்தளத்தில் வெளியான பதிவுகளும் சீன அரசால் நீக்கம்

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவிற்கு நிர்வாக ரீதியாக உதவுவது தொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதுகுறித்து அன்றைய தினமே தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

இதற்கு முன்னர் சீனாவில் இருந்து மருத்துவ உதவிகளை பெறுவதற்கு இந்தியா தயாராக உள்ளதாகவும் ஒன்றிய அரசு அறிவித்திருந்திருந்து. சீனாவிலுள்ள தனியார் நிறுவனங்களும், அமைப்புகளும் எண்ணற்ற உபகரணங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு அனுப்பியுள்ளனர்.

அமெரிக்க டாலரின் இடத்தைப் பிடிக்குமா சீன நாணயமான ரென்மின்பி? – மாறி வரும் சர்வதேச பொருளாதார சூழல்கள்

இதே போன்று, கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ஏறத்தாழ 40,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா நிறுவனங்கள் சீன நிறுவனத்திடம் முன்பதிவு செய்திருந்தன. அதில் 21,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, 21 மில்லியன் முகக்கவசங்கள், 3,800 டன் மருந்துகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்