சீனாவில் அரிசி வரத்து குறைந்துள்ளதால் இந்தியாவிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது. இது கடந்த தசாப்தங்களில் இல்லாத ஒன்றாகும்.
”கடந்த மூன்று தசாப்தங்களாக இல்லாத வகையில் முதன்முறையாக இந்தியா, சீனாவிற்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக” தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவும், மிகப்பெரிய அரிசி இறக்குமதியில் சீனாவும் உள்ளன. சீனாவில் உள்ள பெய்ஜிங் மாநிலம் ஆண்டுதோறும் சுமார் 4 மில்லியன் டன் அரிசியை இறக்குமதி செய்கிறது. ஆனால், அரிசியின் தரத்தைக் காரணம் காட்டி இந்தியாவில் இருந்து வாங்குவதைத் தவிர்த்து வந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தொடர்பான அரசியல் பதற்றங்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த வார்த்தக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
“முதன்முறையாக சீனா அரிசி இந்தியாவிடம் அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது. இந்தியப் பயிரின் தரத்தைப் பார்த்தபின் அது அடுத்த ஆண்டு வாங்குவதை அதிகரிக்கக்கூடும் ”என்று நெல் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பி.வி.கிருஷ்ண ராவ் கூறியுள்ளார்.
இந்திய வர்த்தகர்கள் டிசம்பர் – பிப்ரவரி மாதத்தில், 100,000 டன் குருணை அரிசியை ஒரு டன்னுக்கு 300 டாலர் என ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் பாரம்பரிய இறக்குமதியாளர்களான தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிடம் தற்போது அரசி ஏற்றுமதிக்கான கையிருப்பு குறைவாகவே உள்ளது. இந்தியச் சந்தை மதிப்போடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மற்ற நாடுகளில் டன்னுக்கு 30 டாலர் அதிகமாகவே உள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.