இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை ஏற்பட்டது இயல்பானதா அல்லது சீனா தான் காரணமா என்பது விவாதத்திற்கு உட்பட்டது என பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகளில் சீனா முதலிடம் – எல்லை பிரச்சனைக்குப் பிறகும் உயர்ந்துள்ள வர்த்தகம்
இதுகுறித்து நிகழ்வு ஒன்றில் அவர் பேசிய உரை தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அந்த உரையியில்,”கொரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை தீவிர நோய் பரவலா அல்லது அனுப்பிவைக்கப்பட்டதா? என்பது விவாதத்திற்கு உட்பட்டது. ஏனென்றால் உலகில் உள்ள எல்லா நாடுகளும் சீனாவை சந்தேகிக்கின்றன.அதே போல இந்தியாவிலும் பிரதமர் மோடி சீனாவை சந்தேகிக்கிறார்” என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறப்பட்டுள்ளது.
’சீனா என்ற வார்த்தையை உச்சரிக்க அஞ்சுகிறாரா பிரதமர் மோடி?’ – கார்த்திக் சிதம்பரம்
மேலும்,”இந்தியாவை அசிங்கப்படுத்த சீனா தொடுத்த வைரஸ் போர் என்றே கருதுகிறோம். ஏனென்றால் கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அண்டைநாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏற்படவில்லை” என்று அவரது உரையில் ஹிந்தி மொழியில் கைலாஷ் தெரிவித்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உரையின்போது, அவர் ஹிந்தியில் வர் அல்லது வார் என்று கூறியது போர்/தற்காப்பு எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவித்துள்ளது.
சீனாவில் இஸ்லாமியர்களை அடையாளம் காண மென்பொருள் – அலிபாபா நிறுவனம் உருவாக்கியுள்ளது
இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில செய்திதொடர்பாளர், “இந்தியாவின் மீது சீனா உயிரிப்போரை தொடுத்துள்ளது என்று கைலாஷ் விஜய்வர்கியா கூறியுள்ளார் என்றால், பாஜகவின் முக்கியமான பொறுப்பில் உள்ள அவர் இதைத் தெளிவு படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.