Aran Sei

மூன்று ஆஸ்கார் விருதுகள் வென்ற சீன இயக்குனரின் செய்திகளுக்கு தடை – சமூகவலைத்தளத்தில் வெளியான பதிவுகளும் சீன அரசால் நீக்கம்

ஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தாண்டு 3 பிரிவுகளில் ஆஸ்கார் விருது வென்ற ‘நோமாட்லண்ட்'(NOMADLAND) படத்தை இயக்கிய சீன நாட்டை சார்ந்த சோலே ஜாவோ குறித்த செய்திகளை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.

அண்மையில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குனர் , சிறந்த நடிகை, சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் சீன நாட்டைச் சார்ந்த சோலே ஜாவோ இயக்கிய ‘நோமாட்லண்ட்’ திரைப்படம் விருதுகளை வென்றிருந்தது.

தேசிய விருதுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் – தமிழ்ஸ்டுடியோ அருண்

இந்நிலையில், சோலே ஜாவோவுக்கு வாழ்த்து தெரிவித்து சீன மக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த ஏப்ரல் 26 அன்று பதிவிட்டிருந்தனர். ஆனால், அன்று மதியமே சோலே ஜாவோ விருது பெறும் படங்கள், காணொளிகள், பதிவுகள்குறித்த பெரும்பான்மையான செய்திகள் நீக்கப்பட்டுள்ளன.

சீன அரசால் சோலே குறித்த பதிவுகள் நீக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் லி யுவான், ” சீன மக்கள் சோலே ஜாவோ ஆஸ்கார் விருது வென்றது குறித்து பெருமிதமாக எண்ணி கொண்டாடிக்கொண்டிருந்தபோது பெய்ஜிங் அவர்குறித்த செய்திகளைத் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு சோலே ஜாவோ சீன அரசை விமர்சித்திருந்ததாலேயே இப்போது அவரது செய்திகள் நீக்கப்படுகின்றன”. என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மோடி பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டதாக வெளியான படம் – உண்மை சரிபார்ப்பு

இதே போன்று, சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான பீப்பிள்ஸ் டெய்லி, அரசு ஒளிபரப்பு நிறுவனங்களான சி.சி.டி.வி மற்றும் சின்ஹுவா ஆகியவற்றிலும் சோலே ஜாவோ குறித்து எந்தச் செய்தியும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சீன மக்கள் அரசின் தணிக்கைக்கு உள்ளாகாதவாறு சோலே ஜாவோவின் பெயரை எண்களில் குறிப்பிட்டும், புதுப்புது விதங்களில் தணிக்கை உள்ளாகாதவாறு பதிவிட்டும் சோலே ஜாவோவின் ஆஸ்கார் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

Source: variety

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்