பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் திறந்துவைக்கப்பட்ட ஆக்சிஜன் சேகரிப்பு மையத்தின் துவக்க விழாவின்போது கூட்டம் காண்பிப்பதற்அரகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியைக் கொளுத்தும் வெயிலில் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விதிஷா மாவட்ட மருத்துவமனையில் புதிதாகத் துவங்கப்பட்ட ஆக்சிஜன் சேகரிப்பு மையத்தின் துவக்க விழாவின் போது கூட்டம் காண்பிப்பதற்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஆகியோரை அந்த மருத்துவமனையின் ஊழியர்கள் கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அம்மாநில தலைமைச் செயலருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் கலந்து கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, “சிறுமியைக் கட்டாயப்படுத்தி வெயிலில் இரண்டு மணிநேரம் அமர வைத்தது பிரிவு 75 சிறார் நீதிச் சட்டத்தை மீறியதாகும்” என்றும் குழந்தைகள் நல ஆணையம் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.