Aran Sei

வேலைக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 280% உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதற்கு எதிராக, தமிழகம் மற்றும் புதுவையில் செயல்படும் சிஏசிஎல் (CACL) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், விளிம்புநிலை சமூகங்களில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பணிக்கு செல்வது, கொரனோ காலத்திற்கு பின் 280% அதிகரித்துள்ளது என தெரிவித்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பின் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள் ஆர்.வித்யாசாகர் மற்றும் கே.சியாமளா நாச்சியார் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா தொற்றுகாலத்தில் விளிம்புநிலை சமுகத்தில் இருந்து, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுகத்திலிருந்து குழந்தைகள் வேலைக்கு செல்வது, கொரோனாவிற்கு முன் 231 ஆக இருந்தது எனவும் கொரோனா தொற்றுகாலத்தித்திற்கு பின் அது 650 ஆக அதிகரித்திருக்கின்றது என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘குழந்தைகள் பெறுவது நீங்கள், பள்ளிக் கட்டணத்தை அரசு தரவேண்டுமா’ – பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சை பேச்சு

“கொரோனா தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகள் வேலைக்கு செல்வது 28.2% இருந்து 79.6% ஆக உயர்ந்திருக்கிறது. நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் பேட்டிகண்ட 818 குழந்தைகளில் 553 பேர் கொரோனா காலத்திலும் பாடத்தை தொடர்ந்து கொண்டிருந்ததாகவும், 265 பேர் பணிபுரிகிறார்கள்” என்று ஆர்.வித்யாசாகர் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு மண்டல பகுதிகளில், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றும் , குழந்தை தொழிலாளர்களில் 30.8% பேர் உற்பத்தி ஆலைகளிலும், 26.4% பேர் சேவை துறையிலும் மற்றவர்கள் விவசாய, நூற்பு ஆலைகளிலும் பணிபுரிவதாக ஆர்.வித்யாசாகர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் “பெருந்தொற்று” தலைமுறை – 37.5 கோடி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் : ஆய்வு

இதற்கு மிக முக்கியக் காரணமாக குடும்ப சூழலும், அதனால் இணைய வகுப்புகளில் கவனம் செலுத்த முடியாததும், சிலரது குடும்பங்களில் செல்போன் இல்லாததுமே என்று ஆர்.வித்யாசாகர் தி இந்து  -விடம் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய சிஏசிஎல் அமைப்பின் வடக்கு மண்டல பொறுப்பாளர் தேவநேயன், “ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளிகள் திறந்தப் பின்னும் குடும்பத்தால் வற்புறுத்தப்பட்டு குழந்தைகள் வேலைக்கு அனுப்படப் போகிறார்கள். ஏனென்றால் அந்த அளவு வறுமை நிலவுகிறது. அப்படியென்றால் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் நிலைமை என்ன? அவர்களை குறித்த சரியான புள்ளிவிவரம் கூட நம்மிடம் இல்லை. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் அவர்களது கல்வி, ஆரோக்கியம் குறித்து அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட 12 குழந்தைகள் – கவனக்குறைவினால் மஹாராஷ்டிராவில்  நிகழ்ந்த சம்பவம்

மேலும் இந்த அறிக்கையை படித்த பின்பு கருத்து தெரிவித்துள்ள அருணோதயாவின் இயக்குனர் விர்ஜில்.டி.சாமி ” இந்த கொரோனா காலகட்டம், குழந்தைகளின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கிறது, நாம் உடனடியாக குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது

கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்ற சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த சிறுமி, கொரனோ தொற்றுகாலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால், வேலூரில் ஒருவர் வீட்டில் வேலைக்காக சென்றிருந்ததாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னர்வ தொண்டு நிறுவனம் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் மீட்கப்பட்ட அவர், அந்த வீட்டின் உரிமையாளரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருந்தது தெரியவந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோமதி கொரோனா காலத்தில் வேலைக்கு சென்று பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளில் ஒருவர் மட்டுமே என்று தி இந்து கூறியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹுருன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில், கொரோனா காலத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானியின் சொத்து மதிப்பு 24% அதிகரித்ததுடன், அவர் உலக கோடீஸ்வரர் பட்டியலில் 8 ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்