Aran Sei

ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிக்க குழு அமைத்த முதலமைச்சர் – நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

யுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதற்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளிட்டிருக்கு அறிக்கையில், “சிறை” என்பது தவறிழைத்த மனிதனை நல்வழிப்படுத்தி சமூகத்தில் கலக்க தகுதியானவனாக மாற்றுவதற்கே என்பது நாகரீக சமூகம் ஏற்கொண்ட கருத்தியல் ஆகும். அதிலும் குற்றமற்றவர்கள்கூட சில நேரங்களில் நீதிப்பிழையால் சிறை தண்டனை அடைந்து விடும் நேர்வுகளை இந்த உலகம் கண்டிருக்கிறது என்பதால் சிறைகள் ஒரு போதும் பழிவாங்கும் இடமாக இருக்கக்கூடாது என்பதே நியதி.

மரபின் தேடல் என்பது அதிகாரத்தைக் களைவது – தொ.ப.வுக்கு நினைவஞ்சலி

“Hate Crimes: Not Criminals” என்பது மகாத்மா காந்தியடிகளின் புகழ்பெற்ற மேற்கோள். ஒரு மனிதனை 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருப்தே அதிகப்படியானது என்றார் மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருட்டிணய்யர். ஒரு நாடு நாகரீகமடைந்து விட்டது என்பதை சிறைவாசிகளை அவ்வரசு எவ்வாறு கையாள்கிறது என்பதில் தான் அடங்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது.

ஆயுள் சிறை என்பது அரசின் தண்டனை குறைப்பு அதிகாரத்திற்கு உட்பட்டதே என்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்திவிட்டது. சிறை விதிகளின்படி இவ்வதிகாரத்தை பயன்படுத்தி முன்விடுதலை பெற தகுதி பெற்றும் சிறை சீர்திருத்தங்கள் குறித்து புரிதலற்ற அதிகாரிகள் கடந்த காலங்களில் விடுதலைக்கு தடையாக இருந்தனர்.

இதனையெல்லாம் உணர்ந்தவராக ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்.

தொ.பரமசிவன் மரணம்: வேர்களை நோக்கி பயணித்த ஆலமரம் வீழ்ந்தது – உமேஷ் சுப்ரமணி

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உளவியலாளர், மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவ கல்வி இயக்குநர், மூத்த வழக்கறிஞர், தலைமை நன்னடத்தை அலுவலர் மற்றும் சிறைத்துறை துணைத்தலைவர் என அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையே மாண்புமிகு முதல்வர் அவர்களின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவுமிக்க இந்த மனிதநேய அறிவிப்பிற்கு 31 ஆண்டுகளாக சிறைவாசிகளின் துன்பங்கள் குறித்து நன்கு அறிந்தவள், நேரடி சாட்சி என்ற முறையில் எனது அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அற்புதம்மாள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்