“நேற்று (பிப்பிரவரி 24) காலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்தார், அந்நிகழ்வில், மு.க ஸ்டாலின் அவர்களே நின்று கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் தங்கள் கால் மீது கால் போட்டு உட்கார்ந்து கொண்டு இருப்பதா என்று கூறி, மாலையில் நடந்த நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட இருக்கைகளை எடுத்து விட்டதாக” பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்திப்பதற்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலை முன்பு பிரத்தியேகமாகப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பந்தலில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கும் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து அவருக்குப் புத்தகம் மற்றும் வேட்டியைப் பரிசளித்தனர். இந்த நிகழ்வில் வயது வித்தியாசமின்றி வெற்றி பெற்ற பல வேட்பாளர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றதாக” பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
“இந்நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நான்கைந்து மணி நேரம் நின்று கொண்டே வெற்றி பெற்ற வேட்பாளர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர், புகைப்பட கலைஞர்கள் மற்றும் கேமராமேன்கள் ஆகியோர் அமர்வதற்கு அங்கு இருக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தன. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே நின்று கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் தங்கள் கால் மீது கால் போட்டு உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும், அதனால் முதலமைச்சருக்கு அவமரியாதை ஏற்பட்டு விட்டதாகக் கூறி, மாலையில் நடந்த நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு எனக் கொடுக்கப்பட்ட இருக்கைகளை எடுத்து விட்டதாக” பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
“பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்பட்ட முதல் நாளிலேயே அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்பு பத்திரிகையாளர்கள் அமரக் கூடாதா? இதுதான் பத்திரிகையாளர்களின் நலன் காக்கும் அரசா?” என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மின் பகிர்மான நிறுவனங்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசு: தெலுங்கானா மின் ஊழியர்கள் போராட்டம்
“முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே நிற்கும் போது நீங்கள் உட்கார்ந்து கொண்டு இருப்பீர்களா என்று பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலிகளை எடுத்து விட்டதற்கு, எதிர்வினையாக அந்நிகழ்ச்சி ஆரம்பித்ததும் நிருபர்கள், கேமராமேன்கள் கேமராவை ஆன் மட்டும் செய்து வைத்து விட்டு பக்கத்தில் உள்ள கட்டடத்தின் படிக்கட்டில் போய் அமர்ந்துவிட்டனர். கலைஞர் டிவி கேமராமேன்கள் மற்றும் சில யூடியூபர் சானல் ஆட்களைத் தவிர மற்ற யாரையும் காணாமல் கேமரா மட்டும் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்ததாக” பத்திரிகையாளர்கள் கூறினர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.