Aran Sei

‘திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு அதிக பொறுமை வேண்டும்’ – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

image credit : thehindu.com

திருப்பதி பாலாஜியின் பக்தர் அதிக பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று திருப்பதி கோயில் பூஜை சடங்குகளில் நடந்த முறைகேடுகளை உடனடியாக விசாரிக்க கோரி நீதிமன்றத்தை நாடிய மனுதாரரிடம் இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார்.

மனுதாரர் ஸ்ரீவாரி தாதா இந்தப் பிரச்சினை அடிப்படை உரிமைகளைப் பற்றியது என்றும் ஆனால் பூஜைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள மறுத்து வருகிறது என்றும் தன்னுடைய மனுவில் கூறியுள்ளார்.

தலித் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்படாதது ஏன்? – சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவோடு ஒரு நேர்காணல்

அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா, “நீங்கள் கடவுள் பாலாஜியின் ஒரு பக்தர். பாலாஜி பக்தர்களுக்குப் பொறுமை இருக்க வேண்டும். உங்களுக்குப் பொறுமை இல்லை. மனுவை விசாரிக்கக் கோரி, மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறீர்கள். ஒவ்வொரு நாளும் தொந்தரவு செய்கிறீர்கள். விசாரனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது நான் செத்துவிடுவேன் என்று அச்சுறுத்துகிறீர்கள். நீங்கள் இப்படி செய்யக் கூடாது.” என்று மனுதாரரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

“என்னுடைய குடும்பத்தினரும் பாலாஜியின் பக்தர்கள்தான். நான், என் சகோதரர், என் சகோதரி என நாங்கள் அனைவரும் பாலாஜியின் பக்தர்கள். பூஜையில் நாம் தலையிட முடியுமா? அது எப்படி நடத்தப்பட வேண்டும்? ஒரு பூஜையில் எத்தனை பேர் கலந்து கொள்வது என்பனவும் அடிப்படை உரிமைகள்தானே? பூஜைகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதில் நீதிமன்றம் தலையிட முடியுமா?” கேள்வி எழுப்பியுள்ளார்.

அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பேரிழப்பு – C40 நகரங்கள் அமைப்பின் அறிக்கை

அதன்பிறகு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா மனுதாரரிடம் அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று கேட்டுள்ளார். மனுதாரர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், தலைமை நீதிபதி தெலுங்கு மொழியில் அவரிடம் பேசத்தொடங்கியுள்ளார்.

“நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்டோம். அதேபோல, எதிர்தரப்பின் பேச்சையும் கேட்போம். பொறுமையாக இருங்கள்.” என்று மனுதாரரிடம் கூறியுள்ளார்.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

அதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வழக்கறிஞரிடம், மனுதாரர் கொடுத்த மனு தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த விசாரணை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்