Aran Sei

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம்: ‘மத்திய அரசின் அழுத்தத்தால் புறக்கணித்த மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும்’ – ப.சிதம்பரம்

வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐநா மனித உரிமை அமைப்பின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மார்ச் 24) தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிந்துள்ள அவர், “ஐநா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இச்செயல் ஒன்றே போதும், அஇஅதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு தரவேண்டும் என்றும் ப.சிதம்பரம் கோரியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் மன்றம் – ‘ தேர்தல் நடப்பதால் புறக்கணிப்பு; இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருக்கும்’ : ஸ்டாலின், வைகோ

மேலும், “வெளியறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐநா மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும்.” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்