Aran Sei

தினசரி தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதேன்? – ஒன்றிய அரசுக்கு ப. சிதம்பரம் கேள்வி

credits : the indian express

மாநில அரசுகளிடம் போதிய தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்றால், தினசரி தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின்  எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது ஏன்? என இந்திய ஒன்றியத்தின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “மாநில அரசுகளிடம் 1.6 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவருக்கான தடுப்பூசியை நிறுத்தி வைப்பதாக கர்நாடகா மற்றும் டெல்லி மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.

”ஒன்றிய சுகாதார அமைச்சரின் இல்லத்திற்கும், டெல்லி முதலமைச்சரின் இல்லத்திற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?, ஏன் இருவரும் நேரில் சந்தித்து, யாருடைய தரவுகள் சரியானது என முடிவுக்கு வரக் கூடாது? ஏன் ஒருவருக்கொருவர் குறை சொல்லிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பதிவில், தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைவதற்கு, தடுப்பூசிகள் பற்றாக்குறையே காரணம் என ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

”தடுப்பூசி பற்றாக்குறை காரணமில்லை என்றால், தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை ஏன் குறைந்து வருகிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு இந்திய ஒன்றியத்தின் சுகாதார அமைச்சருக்கு உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

”தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசியை டெல்லி அரசு நிறுத்திவைத்துள்ளது. தெலங்கானாவின் 33 மாவட்டங்களில் 29 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவது மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகள் தரவுகளில் உண்மையை மறைக்கின்றன என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திக்கின்றன. மாவட்ட வாரியாக நிர்வகிக்கபடும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைபற்றிய தினசரி அறிக்கையை அரசு அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

”தடுப்பூசி பற்றாகுறை இல்லை” என கூறும் ஒன்றிய அமைச்சர், டெல்லி மற்றும் தெலங்கானாவில் இருந்து வரும் உண்மைகளுக்குப் பதிலளிக்க முடியுமா” என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்