Aran Sei

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 2 கிலோ தக்காளி இலவசம் : சத்தீஸ்கர் மாநில அரசின் யுத்தியால் குவியும் மக்கள்

த்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அனைவருக்கும் 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொடக்கத்தில், அம்மாவட்ட சுகாதார மையங்களில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து, பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவமனைகளும் இதே வழிமுறையை பயன்படுத்த தொடங்கியிருக்கின்றன.

குஜராத்தில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட மசூதி – ரமலான் மாதத்தில் இதுவே மகத்துவமென மசூதி நிர்வாகம் அறிவிப்பு

இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசிய அம்மாவட்ட அதிகாரி புருஷோத்தம் சல்லூர், “அதிக எண்ணிக்கையிலான மக்களை தடுப்பூசி பெற செய்யும் நோக்கில் இந்த இலவச தக்காளிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து காய்கறி வியாபாரிகளிடம் கூறினோம். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன், தேவையான தக்காளிகளை வழங்கி வருகிறார்கள். எங்கள் முயற்சி வீணாகவில்லை. மக்கள் அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கியிருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

பிஜாப்பூர் மாவட்ட நிலவரப்படி, ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்கப்படுகிறது.

Source : News18

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்