Aran Sei

பாதுகாப்பு முகாமுக்கு எதிராக போராடிய பழங்குடியினர் மூவர் உயிரிழப்பு – 1000 பழங்குடிகள் ஒன்றிணைந்து வலுக்கும் போராட்டம்

த்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் சிலேஜ்ர் பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டதற்கு எதிராக போராடிய பழங்குடிகளில் 3 பேரைச் சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினரை கண்டித்தும், முகாம் அகற்றப்படவேண்டுமெனக் கோரி 1000 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 6 பேரை விடுவிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர்

இதுகுறித்து தெரிவித்துள்ள அந்தப்பகுதியை சார்ந்த ஆய்ட்டே கோர்ஸா, “பாதுகாப்பு படையினரின் முகாம் அகற்றப்படும் வரை போராடுவோம், மேலும், தவறாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டுளோம்” என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று பேர் மாவோயிஸ்ட் என்று கொல்லப்பட்டது குறித்து தெரிவித்துள்ள அந்தப் பகுதி மக்கள், “பாதுகாப்பு படையினர் எங்களை மாவோயிஸ்ட் அல்லது மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்று கூறுகின்றனர். பின் எப்படி எங்களுக்கு அவர்கள் பாதுகாப்பளிக்க முடியும். அவர்கள் அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றுள்ளனர்” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்