Aran Sei

அலோபதி குறித்த பாபா ராம்தேவ்வின் கருத்து: இந்திய மருத்துவ சங்கத்தின் புகாரால் வழக்குப் பதிந்த காவல்துறை

ந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) அளித்த புகாரைத் தொடர்ந்து, பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வழக்கு குறித்து பேசிய காவல்துறை அதிகாரி நாசர் சித்திகி, “இந்திய மருத்துவ சங்கம் மற்றும் சத்தீஸ்கர் மருத்துவமனை வாரியத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் குப்தா ஆகியோர் அளித்த புகார்களை சரிபார்த்த பின்னர், பாபா ராம்தேவ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும் நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: விவாதத்திற்கு வருமாறு சவால்விடுத்த இந்திய மருத்துவ சங்கம்

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 186 (அரசு ஊழியரை அவரது கடமைகளை செய்யவிடாமல் தடுப்பது), 188 (அதிகாரப்பூர்வமாக நடைமுறையில் உள்ள விதிகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தல்), 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றைப் பரப்பும் வகையில் தீங்கு விளைவிக்கும் செயலைச் செய்வது) மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 உள்ளிட்ட பரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அலோபதி குறித்த தவறான கருத்துக்களை பரப்பியதால் யோகா குரு பாபா ராம்தேவ் மீது ராய்ப்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது என்று சத்தீஸ்கர் மருத்துவமனை வாரியத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் குப்தா கூறியுள்ளார்.

‘டாக்டர்கள் இறைதூதர்கள், கடவுளின் வரப்பிரசாதம்; அவசர சிகிச்சை அலோபதிதான் சிறந்தது’ – பாபா ராம்தேவ்

அண்மையில், பாபா ராம்தேவ் பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அதில், “அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல். அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர். ரெம்டெசிவிர், ஃபாவிஃப்லு மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையில் தோல்வியுற்றது.” என்று ராம்தேவ் கூறியிருந்தார்.

Source; newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்