Aran Sei

காவல்நிலையத்திற்குள் தாக்கப்பட்ட மதபோதகர்- வலதுசாரி அமைப்பினர் மீது வழக்குப்பதிவு

த்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் காவல் நிலையத்திற்குள்ளேயே கிறித்தவ மதபோதகரை  வலது சாரி அமைப்பினர் தாக்கியுள்ளனர்.

அம்மாநிலத்தின் பாட்டாகோன் பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வலதுசாரி அமைப்பினர் கிறித்தவ மதபோதகர் சாஹு மீது  புரணி பஸ்தி   காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்த காவல்துறையினர் அழைத்த நிலையில், சாஹுவும், அம்மாநில கிறிஸ்தவ சபை செயலாளர் மற்றும் மேலுமொருவருடன்  காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் அங்குக் குழுமியிருந்த வலது அமைப்பினர் சாஹுவையும் , அவருடன் வந்தவர்களையும்   தாக்கியுள்ளனர்.

இந்நிலையில்,   கிறிஸ்தவ சபை செயலாளர்  அளித்தப் புகாரில் வலது சாரி அமைப்பினர் மீது  பிரிவு 147, 294, 323 , 506,  86,  353, 452 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

source:தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்