சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தம் மாவட்டத்தில் கிறித்துவ போதகர் வீட்டில் மதமாற்றத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பிய படி ஏறத்தாழ 1௦௦ பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், போதகரின் வீட்டில் தாக்குதல் நடத்தியக் கும்பல் அவரது சொத்துகளைத் தாக்கி, குடும்பத்தினரிடம் தவறாக நடந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதி மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் மொஹிட் கார்க் , “முதற்கட்ட விசாரணையின் படி, ஏறத்தாழ 1௦௦ பேர் கொண்டக் கும்பல் மத ரீதியிலான பொருட்களையும், வீட்டு சாமான்களையும் உடைத்துள்ளது. மேலும், மத நூலையும் கிழித்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலின் போது தாக்கியக் கும்பல் மதமாற்றத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியுள்ளதாகவும் மொஹிட் கார்க் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாநில அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சத்தீஸ்கர் கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் அருண் பண்ணாலால் கூறியுள்ளார்.
மேலும்,”கடந்த 15 நாட்களில் சட்டிஸ்கரில் நடக்கும் குறைந்தபட்சம் 1௦ வது தாக்குதல் சம்பவம் இதுவாகும். ஆனால், எந்த சம்பவத்திலும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தாக்குதல் நடத்தியவர்களுக்கு அரசு சாதகமாக செயல்படுகிறது என்பதற்கு அறிகுறியாக உள்ளது. எங்களுக்குரிய நீதி வேண்டும்”. என்று குறிப்பிட்டுள்ளார்.
source:தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.