Aran Sei

இறந்த மகளின் உடலை 10 கிமீ தோளில் தூக்கி சுமந்த தந்தை – விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சத்தீஸ்கர் மாநில அரசு

Credit : The Wire

த்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில், உயிரிழந்த 7 வயது மகளின் உடலை அவரது தந்தை 10 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ உத்தரவிட்டுள்ளார்.

”லகான்பூர் கிராமத்தில் உள்ள சமூக சுகாதார நிலையத்தில் (சிஎன்சி), வெள்ளிக்கிழமை சிறுமி உயிரிழந்தார். உடலை எடுத்துச் செல்ல வாகனம் வருவதற்கு முன்பாக அவரது தந்தை உடலை எடுத்துச் சென்றுவிட்டார்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“அம்தாலா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் தாஸ், நோய்வாய்ப்பட்ட அவரது மகள் சுரேகாவை லகான்பூர் சிஎன்சிக்கு அழைத்து வந்தார்” என அவர்கள் கூறியுள்ளனர்.

காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டால்தான் அமைதி கிடைக்கும்; மக்களோடு பேசுங்கள் – ஒன்றிய அரசை வலியுறுத்திய மெகபூபா முப்தி

”சிறுமியின் பெற்றோரின் கூற்றுப்படி, ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்துள்ளது (சுமார் 60). கடந்த சில நாட்களாக சிறுமி அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் அவரது உடல்நிலை மோசடைந்ததால், காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார் என கிராமப்புற உதவியாளர் மருத்துவர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார்.

”உடலை எடுத்துச் செல்ல வாகனம் வரும் என்று சிறுமியின் குடும்பத்திடம் கூறினோம். காலை 9.20 மணிக்கு வாகனம் வந்தது. ஆனால், அதற்குள் அவர்கள் சடலத்துடன் வெளியேறிவிட்டனர்.” என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளியில், சிறுமியின் உடலைத் தோளில் சுமந்தபடி 10 கிமீ தூரம் பயணித்து அம்தாலாவில் உள்ள வீட்டைச் சிறுமியின் தந்தை நடந்து வந்தது பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் சுகாதார அதிகாரியை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.தியோ சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்திய உணவகம் – உணவகத்தை மூட உத்தரவிட்ட பஹ்ரைன் அதிகாரிகள்

“நான் காணொளியைப் பார்த்துள்ளேன். அது தொந்தரவாக இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் கூறியுள்ளேன். கடமையை சரியாக செய்யாதவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளேன்.” என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

”வாகனம் வரும் வரை குடும்பத்தினரை காத்திருக்குமாறு சுகாதார பணியாளர்கள் வற்புறுத்தியிருக்க வேண்டும். இது போன்ற விசயங்கள் நடக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்திருக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Source: The Wire

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்