Aran Sei

பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் வழியே இடஒதுக்கீட்டை காலி செய்கிறது பாஜக – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்

ரசு வேலைகளுக்கு இடஒதுக்கீடு பலன்களை அளிக்கிறது என்றும் ஆனால்  நாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஒன்றிய அரசு விற்பனைச் செய்துக்கொண்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று (மார்ச் 28), மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பூபேஷ் பாகேல், மகாராஷ்டிர அமைச்சர் யஷோமதி தாகூர், மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், ஏஐசிசி செயலாளர் ஆஷிஷ் துவா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

ம.பி.யில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்கான போராட்டம் – போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பீம் ஆர்மி தலைவர் கைது

அப்போது, பேசியுள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர், “ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என நாங்கள் போராடுகிறோம். ஆனால், ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசு இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? அரசு வேலைகளுக்கு இடஒதுக்கீடு பலன்களை அளிக்கிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு நாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்பனைச் செய்துக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“இரயில்வே, விமான நிலையங்கள், ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களை அரசு விற்பனை செய்து வருகிறது. பொது நிறுவனங்கள் இல்லாவிட்டால், இடஒதுக்கீட்டுப் பலன்களை ஒருவர் எப்படிப் பெறுவார்? சம்பந்தப்பட்ட சமூகங்கள் இடஒதுக்கீடு பலன்களைப் பெறக் கூடாது என்பதற்காகவே, பாஜக அரசு இந்த நிறுவனங்களை விற்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இடஒதுக்கீடு நெறி மீறும் ஸ்டேட் வங்கி; கண் மூடிக் கொள்ளும் சமூக நீதி அமைச்சகம்’ – சு.வெங்கடேசன்

“இடஒதுக்கீட்டின் பலன்களை மக்கள் பெறாமல் இருக்க பெரிய சதி தீட்டப்படுகிறது. காங்கிரஸ் எப்போதும் பட்டியலின, பழங்குடியினர் மற்றும் ஓபிசி பிரிவினரை ஆதரித்து வருகிறது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு ஓபிசியினரின் பல்வேறு கோரிக்கைகளை புறக்கணிக்கிறது” என்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பேசியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்