இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகசிஸ் ஸ்பைவேரை இந்திய அரசு 2017 இல் வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, “சட்டவிரோதமான ஒட்டுக்கேட்புக் கருவியை வாங்குவது தேசத் துரோகச் செயல்” என்று ஒன்றிய அரசை சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் விமர்சித்துள்ளார்.
தி நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, 2017 இல் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் பெகசிஸ் ஸ்பைவேர் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்க கையெழுத்தாகியுள்ளது. இதன் மதிப்பு ஏறத்தாழ 2 கோடி பில்லியன் டாலர் ஆகும்.
இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பூபேஷ் பாகேல், “மோடி அரசால் உளவு பார்க்கப்படாத ஒரு ஜனநாயக அமைப்பு நாட்டிலேயே இல்லை. அவர்கள் இராணுவத்தைக்கூட விட்டு வைக்கவில்லை. பெகசிஸ் ஸ்பைவேரை வாங்குவதற்கு ஒன்றிய அரசு பல பில்லியன் ரூபாய்களை செலவழித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
लोकतंत्र का ऐसा कोई स्तंभ नहीं जिससे जुड़े लोगों की जासूसी मोदी सरकार ने न की हो, सेना तक को नहीं छोड़ा।
और इसके लिए जनता के अरबों रूपए से जासूसी के लिए #पैगासस ख़रीदा।
सच बताने से भी बचते रहे। यह देशद्रोह ही है।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) January 29, 2022
மேலும், “உண்மை பேசப்படுவதை அவர்கள் தடுக்கிறார்கள். இது தேசத் துரோகச் செயல்” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆளும் பாஜகவின் செயல் தேசத்துரோகச் செயல் என்று காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியுள்ளது.
பெகசிஸ் செயலி குறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள அரண்செய் சிறப்பிதழை (உளவுக்குதிரை) படிக்கவும். இணைப்பு கீழே.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.