Aran Sei

‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து அறிவிப்பு காலம் தாமதமானது – மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு எப்படி உறுதிப்படுத்துமென சத்தீஸ்கர் முதல்வர் கேள்வி

தினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை, இது காலம் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் விமர்சித்துள்ளார்.

நேற்று (ஜூன் 7), செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்க வேண்டிய தடுப்பு மருந்துகளை ஒன்றிய அரசு எப்படி உறுதிப்படுத்தப் போகிறது? கடந்த சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே, ​​சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்று மாநில அரசு அறிவித்துவிட்டது.” என்று நினைவூட்டியுள்ளார்.

‘கொரோனா தேசத்தின் நோயா அல்லது மாநிலத்தின் பிரச்சினையா ’ – தடுப்பு மருந்து ஒதுக்கீடு குறித்து ஜார்கண்ட் முதல்வர் கேள்வி

மேலும், “இலவசமாக தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமரை பலமுறை வலியுறுத்தி வந்தோம். ஆனால் எங்கள் வேண்டுகோள் கவனிக்கப்படாததால்தான், எங்கள் (மாநிலங்களின்) சொந்த நிதிலிருந்து நாங்கள் தடுப்பு மருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.” என்று பூபேஷ் பாகேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source; newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்