Aran Sei

இடம்பெயர்ந்த பஸ்தர் பழங்குயினர் மறுவாழ்விற்கு உறுதியளித்த சத்தீஸ்கர் முதலமைச்சர் – ஏற்க மறுக்கும் பழங்குடியினர்.

Credit: The New Indian Express

த்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினருக்கு பாதுகாப்பான மறுவாழ்வு சூழல் ஏற்படுத்தித் தரப்படும் என சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் உறுதியளித்துள்ள நிலையில், பெரும்பான்மையான பழங்குடியினர் திரும்ப வரத் தயாராக இல்லை என தெரிவித்துள்ளனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சல்வா ஜூடும் (மாவோயிஸ்ட் எதிர்ப்பு பிரச்சாரம்) சம்பவத்தின்போது மோதல் பகுதியான பஸ்தாரில் இருந்த பழங்குடியினர் இடம்பெயர்ந்து அண்டை மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் குடியேறினர்.

கழிவுகளை அகற்றும் பணியில் 1993 லிருந்து தற்போதுவரை 917 பேர் உயிரிழப்பு – 214 இறப்புகளுடன் தமிழ்நாடு முதலிடம்

முதலமைச்சர் பூபேஷ் பாகேலை ராய்பூரில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்த நூற்றுக்கணக்கான பழங்குடியினர், பாதுகாப்பு படை அல்லது காவல்துறை முகாம்களை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பான மறுவாழ்வு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்ததை கேட்டுத் திருப்தி அடைந்தனர்.

இடம்பெயர்ந்த பழங்குடியினர் எழுப்பிய கோரிக்கைகளை ஏற்ற முதலமைச்சரின் முடிவு வரவேற்கத்தக்கது ஆகும். மேலும், ஒரு செயல் திட்டத்தின் மூலம் அவர்கள் மீண்டும் பஸ்தர் திரும்புவதற்கு சாதகமான சூழலை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். ஆனால் பெரும்பாலான பழங்குடியினர், காவல்துறை முகாம் இருக்கும் பகுதிக்கு அருகிலோ அல்லது மீண்டும் பஸ்தாருக்கு திரும்பி வரவோ விரும்பவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கையாக டெல்லிக்கு செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேசி ஒரு பரந்த மறுவாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம். திரிபுரா மாநிலத்தில் மறுவாழ்வுத் திட்டம் நடைபெறும்போது பஸ்தர் பழங்குடியினருக்கு ஏன் அப்படி செய்யக் கூடாது?.” என்று பஸ்தர் மண்டலத்தின் புதிய அமைதி செயல்முறையின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரான்ஷு சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக தரவுகள் இல்லை – ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்

மாநில அரசின் உத்தரவின் பெயரில் அண்டை மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட சவுத்ரி, “இடம்பெயர்ந்த பழங்குடியினரில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே மீண்டும் பஸ்தர் திரும்பத் தயாராக உள்ளனர். அதுவும் ஒரு பாதுகாப்பான மறுவாழ்வு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டால் மட்டுமே வருவார்கள்என கூறியுள்ளார்.

தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 200க்கு மேற்பட்ட கிராமங்களில் பழங்குடியினர் குடியேறியுள்ளனர், “வன்முறைக்கு பயந்து பஸ்தாரை விட்டு வெளியேறிய பெரும்பாலான பழங்குடியினர், அண்டை மாநிலங்களில் தங்கள் அன்றாட வாழ்க்கையில் துன்பங்களை எதிர்கொண்டபோதிலும் திரும்ப வர தயாராக இல்லைஎன குறிப்பிட்டார்.

சல்வா ஜூடும் காலத்தில் பஸ்தாரில் இருந்து சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது. இதில் முதல்வருடனான சந்திப்பிற்கு பிறகு வெறும் 152 குடும்பங்கள் மட்டுமே, பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயர தயாராக உள்ளனர்என்று சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

Source: The New Indian Express

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடும் தமிழக அரசின் எதிவினையும்

விளக்குகிறார் மருத்துவர், சமூகச் செயற்பாட்டாளர் காந்தராஜ்

மேலும் அறிய லிங்க்கை கிளிக் செய்யவும்

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்