Aran Sei

‘பாஜகவின் சர்வாதிகார ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் கருத்து

ர்வாதிகாரிகளின் கட்சியான பாஜக ஆட்சியின் கீழ் உத்தரபிரதேச மாநிலம் அச்சத்தில் வாழ்கிறது என்றும் அங்கு மாற்றுக் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேச சட்டபேரவைத் தேர்தலுக்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த பார்வையாளராக பூபேஷ் பாகேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(டிசம்பர் 1), பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள அவர், “தேர்தல் வாக்குறுதி எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. அதற்குப் பதிலாக மதரீதியான கருத்துக்களைக் கூறி மக்களின் கவனத்தை திசை திருப்பவே முயல்கிறது. உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் மட்டுமே போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ்வாதியும் பாஜகக்கு ஆதரவாக சமரசம் செய்து கொண்டதாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

‘எங்களுடைய மிசோ மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக்குங்கள்’- மிசோரம் முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல்

“உத்தரபிரதேச சட்டபேரவைத் தேர்தல் முடிவுகள் முந்தைய தேர்தல்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். அம்முடிவுகள் கருத்துக் கணிப்பு நிபுணர்கள் பலரை ஆச்சரியப்படுத்தலாம். பாஜக ஆட்சியில் உத்தரபிரதேசம் அச்சத்தில் வாழ்கிறது என்பது நிதர்சனமான உண்மை. எனது கருத்தை ஒரே வாக்கியத்தில் சொன்னால், உத்தரபிரதேசம் சர்வாதிகாரிகளின் கட்சியால் ஆளப்படுகிறது. அங்கு மாற்றுக்கருத்துகள் நசுக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் அத்துமீறல் புகார்கள் – கல்லூரி பேராசிரியர் கைது

மேலும், “மோடி அரசின் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இனி விவசாயிகள் பாஜகவை எப்போதும் நம்ப மாட்டார்கள். பாஜக ஏற்படுத்திய அரசியல்ரீதியிலான பாதிப்புகள் நிரந்தரமானது. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் முடிவால், விவசாயிகளை ஆதரிக்கும் கட்சியாக பாஜக தன்னை மாற்றிக்கொள்ள முடியாது” என்று சத்தீஸ்கர் முதலமைச்சர்  பூபேஷ் பாகேல் குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்