Aran Sei

‘என்ன சொல்ல? சச்சினை போல சதம் அடிக்கிறது பெட்ரோல் விலை’ – சத்தீஸ்கர் முதலமைச்சர் ஆதங்கம்

ச்சின் டெண்டுல்கரின் சென்ட்சுரிகளைப் போலவே பெட்ரோல் விலையும் அதிகரித்து வருகிறது என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் விமர்சித்துள்ளார்.

நேற்று (ஜூலை 9), சத்தீஸ்கர் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த, கிராமங்களில் ராமாயணத்தை பாராயணம் செய்யும் குழுக்களுக்கு இடையேயான போட்டியில் பூபேஷ் பாகேல் கலந்துக்கொண்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அவர், “பாஜக 80களில்தான் ராமஜன்ம பூமி பிரச்சினையையே எழுப்பியது. அவர்களுக்கு அதற்கு முன்பு ஸ்ரீ ராமரை தெரியாது. நம் தலைவர் மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கு முன்பு ‘ரகுபதி ராகவ் ராஜா ராம்’ என்ற பாடலைப் பாடினார் … ராம் ஹமரே ஹை அவுர் ரஹங்கே (ராமர் நம்முடையவர். நம்முடனே எப்போதும் இருப்பார்.) பாஜக அவர்களின் அரசியலுக்காக இதை பயன்படுத்துகிறது. ராமாயணம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம் கிராமங்களில் பாராயணம் வடிவில் புழக்கத்தில் இருந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மாட்டு வண்டி பயணம் சென்ற வாஜ்பாய் – பழைய காணொளியை பகிரும் எதிர்கட்சியினர்

“இது எங்கள் பண்பாட்டில் உள்ளது. நாம் நம் பண்பாட்டிற்காக ஏதாவது செய்தால் பாஜகவுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் நம் பண்பாட்டிற்காக எதையும் செய்யவில்லை. இப்போது யாராவது ஏதாவது செய்ய முயன்றால், ராமர் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ராமர் மீது அவர்களுக்கு பதிப்புரிமை இருக்கிறதா என்ன? ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்.” என்று பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வு குறித்து பேசிய அவர், “பெட்ரோல் விலையுயர்வு குறித்து நாம் என்ன சொல்ல முடியும்? டெண்டுல்கரின் செண்ட்சூரிகளைப் போலவே பெட்ரோல் விலையும் அதிகரித்து வருகிறது. முன்னர், பெட்ரோல் விலை பிரதமரின் வயதுக்கு சமமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால், இப்போது விலை அவரது வயதைக் கடந்து சென்றுவிட்டது.” என்று விமர்சித்துள்ளார்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்