வகுப்பறைகளில் ஹிஜாப் தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சாவை பிப். 25 தேதிவரை நீதிமன்றத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சேத்தன் குமார் சார்பில், பிப். 23 தேதி தாக்கல் செய்யப்பட்ட பிணை உத்தரவை நீதிமன்ற பிப். 25 தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பெங்களூரு மத்திய பிரிவின் துணைக் காவல் ஆணையர் எம்.என். அனுசேத், “சேத்தன் குமார் மீது 505(2) (இரு தரப்பினருக்கு இடையே பகைமை, வெறுப்பு அல்லது விரோதத்தை வளர்த்தல் அல்லது ஊக்குவித்தல்) மற்றும் 504 (பொது அமைதிக்கு குந்தம் ஏற்படும் வகையில் திட்டமிட்டு காரியங்களை செய்தல்) பிரிவுகளின் கீழ் பெங்களூரு காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போர் சூழல் – $100 மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேத்தன் குமார், அவரது 39வது பிறந்தநாளை (பிப். 24) சிறையில் கழிக்க உள்ளார் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிஜாப் தடை விதித்த நீதிபதிகள் குறித்து பிப் 16 தேதி சேத்தன் குமார் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக வழக்கு பதியப்பட்டிருப்பதாக பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும்.
2020 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கியது நீதிபதி வழங்கியபோது பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டிய சேத்தன் குமார், அதே நீதிபதி தான் தற்போது ஹிஜாப் வழக்கில் தடை விதித்துள்ளார். அவருக்குத் தேவையான தெளிவு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.